"என் பக்கத்துல படுத்துக்கோ," ஒன்பது வயது மாதவன் சிணுங்கிவான்.
தந்தை கோபித்து கொண்டால், அவன் கண்ணீரை துடைத்து, அவனை மடியில் அமர வைத்து, இனிப்பு பண்டம் கொடுத்து, கதை சொல்லி அவனை சிரிக்க வைப்பாள்.
"வேலை இருக்குடா கண்ணா..." அவன் தாய் ஜெயா கொஞ்சிவாள்.
அவன் முகம் வாடுவதைக் கண்டு பொருக்க மாட்டாமல் அவன் இழுத்த இழுப்புக்கு அவன் பின்னோடு சென்று அவனுடன் படுத்துக்கொண்ள்வாள். தலையை வருடிவிட, மகன் உலகமறந்து உறங்குவதை கண்டு மகிழ்வாள்.
"உப்புமாவா?" என்ற முகம் வாடினால் உடனே தோசை செய்து அவன் முகம் மலருவதை ரசிப்பாள்.
படிப்பில் முதல் ரேங்க் வரவில்லை என்றால் என்ன, என் பிள்ளை கெட்டிக்காரன், பெரிய மனுஷனாக வருவான் என்று முதலில் நம்பியது இந்த தாய்தான்.
இன்று கூடதான், வேலையில் முன்னேற, குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய பாவம் எவ்வளவு கடமைகளில் சிக்கி கொண்டு சமாளிக்க முயற்சி செய்கிறான் அவள் மகன். தன்னால் முன்னை போல் உதவ முடியவில்லையே என்று ஏங்குகிறது மனமே தவிர தன்னை கண்டுகொள்வதில்லை என்று மகன் மீது ஒரு துளி கோவமோ வருத்தமோ இல்லை.
No comments:
Post a Comment