Sunday, November 13, 2011

குசேலர் - சுதாமா

சுதாமாவின் மனைவி அவலை கட்டிக்கொடுக்கிறாள் 
இந்த கதை கேட்டு/படித்து வளர்ந்திருக்கிறேன். ஒரு பிடி அவலைத்தின்ற ஸ்ரீ கிருஷ்ணா, பதிலுக்கு தன் பால்ய ச்நேஹிதன் குசேலரின் வாழ்க்கையையே மாற்றினார் என்று. ஏழையாக இருந்த அவனை மதித்து, வரவேர்த்து அவர் கொண்டு வந்த அவல் அவருக்கு தேவாம்ரிதமாக இருந்தது.

குசேலர் தான் யாச்சகனாக வந்திருப்பதை கிருஷ்ணரிடம் சொல்லாமல் அவர் திருப்தியாக பருந்துவதையே கண்டு மகிழ்ந்து வேறெதுவும் கேட்காமல் திரும்பிவிடுகிறார். அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. வீடு மாளிகையாக மாறிவிட்டது, வறுமையில் ஏங்கிய மனைவி, குழந்தைகள் பளபளவென ஜொலிக்கிறார்கள்.


இதை நான் நடனத்தில் சஞ்சாரி பாவமாக செய்திருக்கிறேன். மற்றவர்கள் ஆடியும் பார்த்திருக்கிறேன்! ஒவ்வொருமுறையும் என் கண்களில் தண்ணீர் வந்துவிடும்.

என்ன ஒரு தத்துவம் - குசேலர் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் தன் நண்பன் என் சொல்லக்கூடும் பரமாத்மாவிடம் ஒன்றும் கேட்கவில்லை. தன்னிடம் இருப்பதையே கொடுக்கிறான்.


"இதுதானா!" என்று இளக்காரமாக பாராமல் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று பதிலுக்கு சுதாமா நினைக்க முடியாத அளவுக்கு அவருக்கு கொடுக்கிறார். கேட்டிருந்தால் கேட்டதை மட்டும் தான் கொடுத்திருப்பார்!


கேட்காமல் பெற்றதால் குசேலருக்கும் என்ன பெருமை - சந்தோசம்.


நம்பிக்கை - நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும், முடிந்த அளவு கொடுப்போம். எவ்வளவு எளிதாக இந்த கதை இந்த பாடத்தைக்கர்ப்பிக்கறது! கற்றுக்கொள்ள நாம தயாரா?



No comments:

Post a Comment