Friday, November 18, 2011

இந்தக்காலத்துப்பசங்க!

 ஒரு பெரிய தொழிலதபரைப் பேட்டிக் காணச் சென்றிருந்தேன். என்னுடன் மூன்று இளைஞர்களும் இருந்தார்கள். முதலில் அந்த அதிபரை தனியாக சந்தித்து  என்ன பேசப்போகிறோம் என்று சொல்லிவிட்டு மற்றவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தேன். வீடியோ பிடித்தார்கள். எல்லாம் முடிந்தபிறகு அவர் ஒரு இரண்டு நிமிடம் நின்று பேசினார். "நீங்கள் எல்லோருமே இந்த தொழில் குழுவை சேர்ந்தவர்களா?" என்று கேட்டார்.

"இல்லை" என்று மூவரும் பதிலளித்து சும்மா இருந்தனர். அவர் தயங்கி நின்றார். நான் அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே நினைத்துக்கொண்டேன் - இந்த சில நல்லப்பழக்கங்கள் கூட இந்த காலத்துபசங்களுக்கு இல்லையே!

வணக்கம் சொல்வது, சிரித்துப் பேசுவது, போய்வருகிறேன் என்று சொல்லுவது போல பழக்க வழக்கங்கள் மறைந்துக்கொண்டிருக்கின்றனவா என்று யோசிக்க தோன்றுகிறது. எப்பொழுதும் இந்த கம்ப்யூட்டர் எதிரில் உட்கார்ந்தால் எப்படி மனிதர்களுடன் பழக கற்றுக்கொள்ள முடியும்? பெரியவர்கள் கூட இந்த சின்ன விஷயங்களை சொல்லிக்கொடுப்பதில்லையா?

நாம் ஒருவருடன் ஒருவர் பகிர்ந்தகொள்ள கூடியது ஒரு புன்முறுவல் தான். இதற்க்கு ஏன் இவ்வளவு கஞ்சத்தனம்!

No comments:

Post a Comment