Tuesday, November 1, 2011

Yanthiram

மனிதன் தன்னைப்போல வேலை செய்ய யந்திரங்கள் உருவாக்கப்போகிறான் என்று சொல்லும் பொழுது, சிட்டி மாதிரி ரோபோவைத்தான் நினைத்துப்பார்க்கிறோம். ஆனால் யோசித்துப்பார்த்தால் நாமே ரோபோ ஆகி விட்டோமோ என்று தோணுகிறது.

நம் மன நிலையை குறிக்கும் கண்களை நாம் கறுப்புக் கண்ணாடிகளால் மூடுவது  மட்டும் இல்லாமல் நம் மனதையே மூடி விட்டோம். குளிர் பொட்டிக்காக வீட்டு ஜன்னல் கதவுகளை மூடி சுகமாக அனுபவிக்கும் பொழுது, வெளியில் என்ன நடந்தால் என்ன என்று தன்னை மற்ற மனிதர்களிடத்தினில் இருந்து துண்டித்துவிட்டோம். ரோட்டில் செல்லும் பொழுது காரில் பறக்கும் பொழுது உலகில் என்ன நடந்தால் என்ன, தன் வேலையை தான் பாட்டுக்கு செய்யும் நமக்கு மனித நேயம் இருக்கிறதா என்று சந்தேகம் வருகிறது! சிட்டியை போல பல உண்மைகளை ஒப்பிக்க தெரிந்த நமக்கு அதை அனுபவிக்கமுடியுமா என்ற கேள்வி மனதை துளைக்கிறது. மற்றவனுக்கு பிரச்னை என்றால் எனக்கென்ன என்று எவ்வளவு அழகாக ஒரு ரோபோவைப்போல இருக்க கற்றுக்கொண்டிருக்கிறோம்!

ஆர்டிபிஷல்  இண்டலிஜென்ஸ் என்று நாம் புதுசாக எதையும் கண்டு பிடிக்கவேண்டாம். இருக்கும் புத்தியை யந்திரம் போல உபயோகிக்கும் நம் புத்திசாலித்தனமும் இயற்கைக்கு மாறாக இருப்பதால் இதுவும் செயற்கை தானே!


No comments:

Post a Comment