பொங்கி வரும் எண்ணங்களில் சிக்கிக் கொண்டு நின்றாள் பிரபா. அவளுடைய உயிர் தோழி கமலாவை பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் மகிழ்ச்சி ஒரு பக்கம், ஆனால் இப்பொழுது அவளை எந்த முகத்துடன் சந்திக்கப் போகிறோம் என்ற பயம் மறுபக்கம். பேசாமல் வந்ததாகவே காட்டிக்கொள்ளாமல் நழுவி விடலாமா என்று கூட ஒரு நொடி யோசித்து வெளியேறும் நோக்கத்துடன் சபையின் வாசற் கதவை ஏக்கத்துடன் பார்த்தாள். கமலா தன்னை பார்ப்பதற்கு முன் மெதுவாக வெளியேறிவிடலாம் என்று முற்படவும் செய்தாள்.
Sunday, January 14, 2018
Monday, December 25, 2017
வெளிச்சத்தில் இருட்டு
பாதை ஒன்றே
கண்ணில் தெரியும்
எது ஆரம்பம் என்று
நினைவு இல்லை
இருட்டைக் கிழித்து
வெளிச்சத்தில் இருக்கும்
பாதை ஒன்றே
கண்ணில் தெரியும்
எங்கே முடியும்
என்ற நினைப்பு இல்லை
அதை எண்ணிப் பார்க்க
நெஞ்சில் வீரம் இல்லை
எதிரே இருக்கும் இருட்டு
அதை மறந்துப் போக
எங்கே முடியும்
என்ற நினைப்பு இல்லை
செல்லும் வழியும்
சீராக இல்லை
கரடுமுரடாய்
முள்ளும் மலருமாய்
வறுமையும் செழிப்புமாய்
தனிமையும் இனிமையுமாய்
செல்லும் வழியும்
சீராக இல்லை
கண்ணில் தெரியும்
எது ஆரம்பம் என்று
நினைவு இல்லை
இருட்டைக் கிழித்து
வெளிச்சத்தில் இருக்கும்
பாதை ஒன்றே
கண்ணில் தெரியும்
எங்கே முடியும்
என்ற நினைப்பு இல்லை
அதை எண்ணிப் பார்க்க
நெஞ்சில் வீரம் இல்லை
எதிரே இருக்கும் இருட்டு
அதை மறந்துப் போக
எங்கே முடியும்
என்ற நினைப்பு இல்லை
செல்லும் வழியும்
சீராக இல்லை
கரடுமுரடாய்
முள்ளும் மலருமாய்
வறுமையும் செழிப்புமாய்
தனிமையும் இனிமையுமாய்
செல்லும் வழியும்
சீராக இல்லை
இதில் கிடைக்கும் எதுவும்
என்னுடையது இல்லை
காயோ கனியோ
இனிப்போ கசப்போ
பொருளோ சுகமோ
புகழோ இகழ்ச்சியோ
இதில் கிடைக்கும் எதுவும்
என்னுடையது இல்லை
மறக்க முயலும் முடிவு
முடிவா தொடக்கமா?
எதிரே தெரியும் இருட்டு
வெறும் ஒரு திரையா?
இங்கே தெரியும் வெளிச்சம்
மெய்யா பொய்யா?
மறக்க முயலும் முடிவு
முடிவா தொடக்கமா?
வெளிச்சம் இருந்தும்
இருட்டில் நிற்கிறேன் நான்
பகட்டைக் கண்டு
சிரிக்கிறேன் நான்
ஒளியைக் கண்டு
பதுங்குகிறேன் நான்
வெளிச்சம் இருந்தும்
இருட்டில் நிற்கிறேன் நான்.
Saturday, December 2, 2017
சிறுதுளி, பெருகும் உள்ளம்
மேகங்களின் மூட்டம் கிளப்பியது
மனதில் விளங்காத குதூகலம்
ஜில்லென்ற காற்று வீச
எதிர்பார்ப்பில் துள்ளியது மனம்
மனதில் விளங்காத குதூகலம்
ஜில்லென்ற காற்று வீச
எதிர்பார்ப்பில் துள்ளியது மனம்
Saturday, November 18, 2017
பேசுவதும் கலை
"கொஞ்சம் நேரமாவது வாயை மூடேன்," என்று அம்மா கெஞ்சினாள் மகள் அஞ்சுவிடம்.
"இல்லைம்மா, இதை மட்டும் சொல்லிடறேன்...கேளேன்," என்று எதற்கும் மசியாத அஞ்சு தொடர்ந்தாள். தன்னையும் மிஞ்சி அம்மா சிரித்து விட்டாள். அதற்கு மேல், மகள் விளாவரியாக விளக்கி வரும் விஷயத்தை அதிகம் காது கொடுத்துக் கேட்கவில்லை ஆனால் புரிந்துகொண்டாள். "சரி, சரி, இப்பொழுதாவது உன் வேலையை கவனி," என்று அனுப்பிவைத்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் போனில் தன் தோழி ஒருத்தியுடன் முடிவே இல்லாமல் பேசுவதைக் கேட்டு, "போறாதா! நிறுத்து, படி," என்று இருந்த இடத்திலிருந்தே கூறினாள்.

Wednesday, November 1, 2017
ஆஹா மழை, ஐயோ மழை
அடுத்த வேளை நீருக்கு என்ன செய்வதென்று திணறினாள் ஈஸ்வரி. இன்று வந்த தண்ணீர் லாரியில் அவளால் இரண்டு நாளைக்கு வேண்டிய அளவுதான் பிடித்துக்கொள்ள முடிந்தது. மூன்றாவது நாள் வரவில்லையென்றால் என்ன செய்வது?
இதே கதைதான் ஊர் முழுக்க - தண்ணீர் பஞ்சம். எங்கெங்கேயோ வெள்ளம் வந்து பாதிக்கப் படுகிறார்கள் என்ற செய்தி மட்டும் வருகிறது. அந்த பாழாப்போன மழை இங்கு பெய்யக்கூடாதா?
பெருமூச்சு விட்டுக்கொண்டே, ஒவ்வொரு நொடியும் அவள் குடும்பத்தினர் செலவழிக்கும் நீரைக் கண்காணித்து வந்தாள். இரண்டு வருடமாக மழை காலை வாரி விட்டது. அதற்கு முன்னால் பெய்த மழை நீரை சரியாகச் சேகரிக்காதலால் எல்லாம் கடலில் சேர்ந்துவிட்டதாம்!
வெயில் காயும் வானத்தைக் கண்டு எத்தனை முறை, மழை வந்து தொலையக்கூ டாதா என்று கடிந்து கொண்டதுண்டு; ஐயோ பெய்ய மாட்டாயா என்று கெஞ்சியதுண்டு; ஏன் சோதிக்கிறாய் என்று கடவுளிடம் புலம்பியது உண்டு. காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைமை, இது நியாயமா !
சாலையில் செல்லும் போது நீரை இறைத்துக்கொண்டுபோகும் லாரிகளைக் கண்டாலே வயிறு பற்றி எரியும். தண்ணீர் பஞ்சம் இருக்கும் இந்த காலத்தில் சற்று கவனமாக இருக்கக்கூடாதா? தண்ணியை மிச்சப்ப படுத்தக்கூடாதா என்று லாரி ஓட்டுபவனை நிறுத்தி கேட்க வேண்டும் என்று தோன்றும்.
இந்த வருடமாவது பெய்யுமா என்று தினம் வானத்தைப் பார்ப்பதும், எல்லோரிடமும் அதைப் பற்றி சர்ச்சை செய்வதுமே ஜோலியாகி விட்டது.
பெய்யாது என்று சொன்ன மழை திடீரென்று அந்த நகரை விஜயம் செய்தது. ஈஸ்வரிக்கு தலைகால் புரியவில்லை. மண்வாசனை தூக்க, வெளியே ஆவலுடன் எட்டிப்பார்த்தாள். தூறல் ஆரம்பித்தவுடன் தன் குழந்தைகளுடன் வேகமாக வெளியே சென்று முதல் மழையின் இனிமையில் நனைந்தாள். இந்த முறை தண்ணீர் பிரச்னை தீரட்டும் என்று ஊர் ஜனங்களுடன் வேண்டிக்கொண்டாள்.
வீட்டுக்குள் நுழைந்தாள். கூரையிலிருந்து நீர் சொட்டியது. அதற்கடியில் பானை ஒன்றை வைத்தாள். விடா மழையில் அந்த பானையும் தான் எத்தனை தாங்கிக்கொள்ளும்? போறாததற்கு வெள்ளம் வேறு! சாலைகள் நதியாகின. மின்சாரம் துண்டிக்கப்பட்டது, போன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன... சில இடங்களில் பாம்புகள் கூட நெளிந்து சென்றதாக வதந்திகள்.
ஐயோ, எப்படா சூரியனைப் பார்ப்போம், மழை போதுமடா சாமி! லாரியில் கூட தண்ணீர் வாங்கிவிடலாம் ஆனால் இந்த வெள்ளமாக ஓடும் நீரை சேமிக்கவும் முடியாமல் உபயோகிக்கவும் முடியாமல் திணறுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை!
ஈஸ்வரி வானத்தை நோக்கி சூரிய பகவான் அருள் புரிய வேண்டும், மறுபடியும் காட்சியளிக்க வேண்டும், மழை நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள் .
இதே கதைதான் ஊர் முழுக்க - தண்ணீர் பஞ்சம். எங்கெங்கேயோ வெள்ளம் வந்து பாதிக்கப் படுகிறார்கள் என்ற செய்தி மட்டும் வருகிறது. அந்த பாழாப்போன மழை இங்கு பெய்யக்கூடாதா?
பெருமூச்சு விட்டுக்கொண்டே, ஒவ்வொரு நொடியும் அவள் குடும்பத்தினர் செலவழிக்கும் நீரைக் கண்காணித்து வந்தாள். இரண்டு வருடமாக மழை காலை வாரி விட்டது. அதற்கு முன்னால் பெய்த மழை நீரை சரியாகச் சேகரிக்காதலால் எல்லாம் கடலில் சேர்ந்துவிட்டதாம்!
வெயில் காயும் வானத்தைக் கண்டு எத்தனை முறை, மழை வந்து தொலையக்கூ டாதா என்று கடிந்து கொண்டதுண்டு; ஐயோ பெய்ய மாட்டாயா என்று கெஞ்சியதுண்டு; ஏன் சோதிக்கிறாய் என்று கடவுளிடம் புலம்பியது உண்டு. காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைமை, இது நியாயமா !
இந்த வருடமாவது பெய்யுமா என்று தினம் வானத்தைப் பார்ப்பதும், எல்லோரிடமும் அதைப் பற்றி சர்ச்சை செய்வதுமே ஜோலியாகி விட்டது.
பெய்யாது என்று சொன்ன மழை திடீரென்று அந்த நகரை விஜயம் செய்தது. ஈஸ்வரிக்கு தலைகால் புரியவில்லை. மண்வாசனை தூக்க, வெளியே ஆவலுடன் எட்டிப்பார்த்தாள். தூறல் ஆரம்பித்தவுடன் தன் குழந்தைகளுடன் வேகமாக வெளியே சென்று முதல் மழையின் இனிமையில் நனைந்தாள். இந்த முறை தண்ணீர் பிரச்னை தீரட்டும் என்று ஊர் ஜனங்களுடன் வேண்டிக்கொண்டாள்.
வீட்டுக்குள் நுழைந்தாள். கூரையிலிருந்து நீர் சொட்டியது. அதற்கடியில் பானை ஒன்றை வைத்தாள். விடா மழையில் அந்த பானையும் தான் எத்தனை தாங்கிக்கொள்ளும்? போறாததற்கு வெள்ளம் வேறு! சாலைகள் நதியாகின. மின்சாரம் துண்டிக்கப்பட்டது, போன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன... சில இடங்களில் பாம்புகள் கூட நெளிந்து சென்றதாக வதந்திகள்.
ஐயோ, எப்படா சூரியனைப் பார்ப்போம், மழை போதுமடா சாமி! லாரியில் கூட தண்ணீர் வாங்கிவிடலாம் ஆனால் இந்த வெள்ளமாக ஓடும் நீரை சேமிக்கவும் முடியாமல் உபயோகிக்கவும் முடியாமல் திணறுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை!
ஈஸ்வரி வானத்தை நோக்கி சூரிய பகவான் அருள் புரிய வேண்டும், மறுபடியும் காட்சியளிக்க வேண்டும், மழை நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள் .
Sunday, October 8, 2017
அன்பின் பல முகங்கள்
"உங்களை பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறது," என்று சுகுணா மறுபடியும் லதாவிடம் கூறினாள்.
அவர்கள் சந்தித்து ஒரு வருடம் தான் ஆகியிருந்தது, ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அடிக்கடி சந்திக்க வேண்டி இருந்தது. பழக்கம் அதிகரிக்க சுகுணாக்கு லதாவின் வேகம், விவேகம், திறமை, எல்லாமே ஆச்சர்யத்தை அளித்தன.
வேலைக்கு போய் கொண்டிருந்த லதா, தன் மாமனாருக்கு உடல் நலம் சரியாக இல்லாத போது, வேலையை விட்டு அவரைப் பார்த்துக் கொண்டாள். அந்த சில மாதங்களில் அவள் நகை செய்யக் கற்றுக்கொண்டாள். தெரிந்தவர்கள் மூலம் விற்பனை செய்ய, அவளுடைய பொருள்கள் பிரசித்தி பெற்று, இப்பொழுது தெரியாதவர்கள் கூட அவளிடம் வாங்க வந்தார்கள்.
ஒரு சிறிய கடை ஆரம்பித்து, இரு பெண்களை அமர்த்தி, இப்பொழுது அவளுடைய கடை ஓகோ என்று ஓடியது. மாமனாரிடமும் நல்ல பெயர். வேலை அனுபவத்தினால் நிர்வாகமும் நன்றாகச் செய்தாள். சுயமாகக் தொழில் செய்வதினால் அவளுடைய தன்னம்பிக்கையும் மெச்சிக்கொள்ளும் படி இருந்தது. அவளுடைய குழந்தைகளும் பொறுப்பாக, தாய்க்கு பெருமை சேர்ப்பவர்களாக, சுதந்திரமாக வளர்ந்தார்கள். கணவன் எல்லாவற்றிற்கும் பக்க பலமாக இருந்தான்.
லதா தானே எல்லாம் செய்வதையம், அவள் குடும்பம் அவளுக்கு ஆதரவாக இருப்பதையும் கண்டு சுகுணா மாய்ந்து போனாள். அவளும் நன்றாகப் படித்தவள் தான். ஆனால் படித்து முடித்த உடனேயே திருமணம், பின்னோடு குழந்தைகள், அவர்களின் பராமரிப்பு... தனியாக எங்கேயும் செல்லவோ, எதையும் செய்யவோ வேண்டிய அவசியமே எழவில்லை. எல்லாவற்றிற்கும் கணவன் வரதன் துணையாக இருந்தான். போராததற்கு வேலை ஆட்கள் வேறு.
லதா எப்பவும் போல் புன்னகையுடன், "நீ படித்தவள்... உன் திறமையை நன்றாக உபயோகிக்கலாம்," என்று ஊக்குவிட்டாள்.
"அவரும் அதையேத் தான் கூறுகிறார். என்ன வேண்டுமோ எடுத்துச் செய் என்று. குழந்தைகளும் வளர்ந்துவிட்டார்கள். சில நேரங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் அவரை நச்சு செய்கிறேன்," என்று அவளே சிரித்துக் கொண்டாள்.
"நீங்கள் கணக்கு வழக்கு பார்ப்பேள் என்றால் எனக்கே ஒத்தாசையாக இருக்கலாமே," என்று லதாவும் எப்பவும் போல் கூறினாள்.
"ஆமாம், இல்லை? நீங்களும் என்னிடம் இதை கூறியிருக்கிறீர்கள். எனக்கு தான் தயக்கம். இன்றைக்கே அவரைக் கேட்கிறேன்."
அன்று மாலை, இரவு உணவு உண்ணும் பொழுது, தான் லதாவை சந்தித்ததைப் பற்றிக் கூறினாள். "கெட்டிக்காரி," என்று வரதன் லதாவைப் புகழ்ந்தான். "கொஞ்சமாவது அவளை போல ஆக வேண்டும் என்று என்றைக்காவது நினைத்திருக்கிறாயா?" என்று மனைவியையும் விளையாட்டாக இடித்துப் பேசினான்.
"அதையேத்தான் சொல்ல வந்தேன். அவள் கடையிலேயே கணக்கு பார்க்க கூப்பிடுகிறாள்."
"நீயா! உனக்கு என்ன அனுபவம் இருக்கிறது? நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் அவளுடைய கடையையும் இழுத்து மூடிடுவாய்!" என்றான் அவன்.
முகம் சுளித்தாள் சுகுணா. "உங்களுக்கு என் மீது நம்பிக்கையே இல்லை."
"அப்படி இல்லைடா, கண்ணா," என்று வரதன் உடனே தன் தொனியை மாற்றிக்கொண்டான். "நீதான் குழந்தைகளை இவ்வளவு நன்றாக வளர்த்தாய், வீட்டை நன்றாகக் பார்த்துக் கொண்டிருக்கிறாய். நமக்கு வேற என்ன வேண்டும்? வேலைக்கு போனால்தான் திறமையா?"
சுகுணாக்கு பெருமையாக இருந்தது. "ஆனால் குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள்."
"நீ குழந்தைத் தனமாகப் பேசுகிறாய். இனிமேல்தான் அவர்களுக்கு நீ தேவை... எதுவாக இருந்தாலும் நீ தானே பார்த்துக்கொள்ள வேண்டும்!"
ஆமாம் என்பது போல் தலையாட்டினாலும் மனதில் சந்தேகம் தொக்கி நின்றது. "இன்னும் அவர்களுடைய கல்யாணம், காட்சின்னு பார்க்க வேண்டும். எத்தனை பொறுப்புகள் உன் மீது. நான் சம்பாதிக்கிறேன், நீ பராமரிக்கிறாய்... எவ்வளவு பெரிய விஷயம் அது," என்று அவளை சமாதானப் படுத்தினான் வரதன்.
அதற்கு பிறகு அவள் லதாவை வேலையைப் பற்றி கேட்கவில்லை, அவளுடன் பழகுவதும் குறைத்துவிட்டாள். ஒரு வித சங்கோசம் என்றும் சொல்லலாம்.
லதாவும் அதை பற்றி கவலைப்படாமல் தன் வேலையில் மும்முரமாக இருந்தாள். பெண்கள் அவளிடம் கேட்டு பிறகு எங்கே சென்றார்கள் என்றே தெரியாமல் அவள் வாழ்க்கையிலிருந்து விலகுவது பழகிவிட்டது.
ஆசை நிராசை

Saturday, September 16, 2017
கரடுமுரடான உறவின் பாதைகள்
காயத்ரி வீட்டுக்குள் நுழைந்து, தன் பையை அதன் இடத்தில் வைத்தாள். முகம், கை மற்றும் கால்களை அலம்பிக் கொண்டு, சமையல் அறையில் நுழைந்து, இரவு சாப்பாட்டிற்கு வேண்டியதைச் செய்யத் தொடங்கினாள்.
போன் மணி அடித்தது. மாமியாருடைய நம்பர் தெரிந்தது. ஒரு நொடிக் கண்ணை மூடிக்கொண்டு, மனதைத் தேற்றிக்கொண்டு பேசுவதற்காக அதைக் கையில் எடுத்தாள்.

Subscribe to:
Posts (Atom)