வெடிக்கு பயந்து, என்னிடம் இருக்கும் சக்கரம் புஸ்வாணம் எல்லாவற்றையும் வெளிச்சம் இருக்கும் பொழுதே ஏத்தி விட்டு, மற்றவர்கள் பட்டாசு வெடிக்கும் பொழுது அறையில் கதவை சாத்திக்கொண்டு, காதலி மூடிக்கொண்ட நாளும் நினவிலிருக்கறது.
பிறகு கையில் ஊசிப்பட்டாசை கொளுத்தி வீரமாக எறிந்த ஞாபகமும் இருக்கு.
புச்வாணம் முகத்தில் வெடித்து கண்ணாடி சிதறியதும் ஒரு அனுபவம்.
அந்த வெடியை கொளுத்தி காதை மூடி தூர ஓடிய நினைவுகளும் முகத்தை மலரச்செய்யும்.
இப்பொழுது அடுத்த தலைமுறை மிக உற்சாகத்துடன் பட்டாசு வெடிப்பதை பார்க்கும் பொழுது, வருடத்தில் ஒரு நாள் அவர்களை தடுப்பதா என்ற ஒரு சிந்தனையும் மனதை தாக்குகிறது. நாம் வருடம் முழுதும் நம் சுற்று வட்டாரத்தை நாசம் செய்வதை விடவா இந்த குழந்தைகள் ஒரு நாளில் செய்து விடுவார்கள்?
அவர்கள் சுதந்திரமாக, ஜாக்ரதையாக பட்டாசு வெடிக்க இடம் விடாமல் கட்டிடங்கள் கட்டியது யார்? எல்லா இடங்களிலும் நடக்க கூட இடம் விடாமல் வண்டிகளை நிறுத்தியது யார்?
Sunday, November 11, 2012
Friday, October 26, 2012
இது ஒரு டைம் பாஸ்
![]() |
நிகழ்ச்சிக்கு ஒரு மாதம் முன்னாலிருந்து - "ஒரு மணிநேர கச்சேரி, 12 பேர்களாவது ஆட வேண்டும்... ஒரு 8 பாட்டுகள் இருக்குமா? கொஞ்சம் கிளாச்சிக்கல், கொஞ்சம் விறுவிறுப்பா சில பாட்டுகள் - இப்படி நல்ல ஒரு மிக்ஸ் இருக்கட்டும்," என்றெல்லாம் வறுத்தி எடுப்பார்கள். பிறகு, "ஆடுபவற்கள் எல்லாம் ப்ரொபெஷ்னல் தானே? ஓஹ்! இவ்வளவு கட்டுப்படியாகாதே! கொஞ்சம் கொறச்சுக்கொங்க! ஆனா 8 பாட்டாவது வேணும்... சரிதானே?" என்று பேரம் பேசுவார்கள். "அப்பொறம், உடை, ஆபரணமெல்லாம் புதுசா, பளிச்சுன்னு இருக்கணம்... சரியா?" இப்படி வேற ஒரு கவலை.
"அண்ணா! கால் சுளுக்கின்றிச்சு அண்ணா!" என்று ஆடுபவர்களில் ஒருவன் திடீரென்று ஜகா வாங்குவான். "ரொம்ப ஜுரம் அண்ணா..." என்று ஒருத்தி மூக்கை உருஞ்சுவாள். எப்படியோ ஒன்று, எல்லாரும் தயாராக நிற்கும் வேளையில், பார்பவர்கள் மெதுவாக, ஆடி அசைஞ்சு வந்து சேரும் வேளையில் நிகழ்ச்சி நடத்துபவர் மணிக்கட்டைப்பார்த்துக்கொண்டே - "சில பாட்டுகளை கட் செஞ்சிடுங்க. அடுத்தது சாப்பிட போவாங்க, பசிக்குதாம்" என்றும் பொழுது இதை ஞாபகப்படுத்தி, தானும் தன் குழுவும் கஷ்டப்பட்டதை ஒரு மாசம் ஒழைச்ச்சதை நினைத்தால் ச்சே என்றாகி விடும். முடிந்தவுடன், "அடடா, கிளாச்சிகால் பீஸ் இன்னும் ஒன்னு இருந்திருக்கலாமே," என்று வேற வேதனைப்படுவது போல ஒரு பாவனை!
அவனுடை நேரத்திற்கும் உழைப்பிற்கும் மதிப்பு இவ்வளவுதானா என்று தோணும். கலை என்ன ஒரு வெறும் டைம் பாசா என்றுக்கூட வெறுத்துப்போகும். ஆனால் பிழைப்பதற்கு இது ஒரே வழி... இதை தெரிந்துதானே இந்த வழியை நாம் மேற்கொண்டோம் என்ற விவேகம் அவனை இதை பொறுத்துக்கொள்ள செய்கிறது!
Thursday, September 27, 2012
வாழ்க்கைக்கல்வி - கவிதை
கல்லில் தடுக்கி விழுந்து எழுந்து
அதனை நகர்த்தி நடக்கக் கற்றேன்
மழையில் நடந்தால் இன்பம் எனினும்
ஒதுங்கி நின்று ரசிக்கக் கற்றேன்
வெயிலில் நடந்து வியர்க்கும் என்று
நிழலில் மறைந்து இயங்கக்கற்றேன்
சொல்லில் பொல்லாத நஞ்சைக்கேட்டு
அந்த வஞ்சனையை அஞ்சக்கற்றேன்
சிரிப்பே உயர்ந்த நகைஎன்றறிந்து
அதனை அணிந்து திருப்திப்பெற்றேன்
வாழ்க்கையே கற்ப்பிக்கும் பாடமென்று
அதனைப்படித்து வாழக்கற்றேன்
அதனை நகர்த்தி நடக்கக் கற்றேன்
மழையில் நடந்தால் இன்பம் எனினும்
ஒதுங்கி நின்று ரசிக்கக் கற்றேன்
வெயிலில் நடந்து வியர்க்கும் என்று
நிழலில் மறைந்து இயங்கக்கற்றேன்
சொல்லில் பொல்லாத நஞ்சைக்கேட்டு
அந்த வஞ்சனையை அஞ்சக்கற்றேன்
சிரிப்பே உயர்ந்த நகைஎன்றறிந்து
அதனை அணிந்து திருப்திப்பெற்றேன்
வாழ்க்கையே கற்ப்பிக்கும் பாடமென்று
அதனைப்படித்து வாழக்கற்றேன்
Sunday, September 16, 2012
காசேதான் கடவுளடா
நான் ஒழைச்சு சம்பாதிக்கிறேன். அந்த காசுல என் குடும்பம் நடக்கறது. எனக்கு தான் முதல் மரியாதை என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஆணவத்திற்கு இன்று சவால் விடுவதுப்போல் கல்லூரி படித்து முடித்த உடனேயே நல்ல சம்பளத்துடன் உத்தியோகம் பார்க்கும் இளைஞர்கள் ஒரு சவால்.
இதை ஒரு பத்திரிகையில் படிக்கும்பொழுது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதனால் தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில் பல ஆண்கள் தற்கொலைசெய்துக்கொள்கிறார்களாம்! தன் மகனோ மகளோ தன்னைவிட அதிகமாக சம்பாதித்து தன்னை அவமதிக்கிறார்கள் என்ற கவலைப்போல!
ஆனால் சிறு வயதிலேயே அந்த பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு கற்றுக்கொடுப்பது யார்? அன்பும் ஆதரவும் கொடுத்திருந்தால் இன்று யார் சம்பளம் யாரைவிட பெரிது என்ற கேள்வி எழுந்திருக்குமா? தன்னுடைய அடையாளமே அந்த வாங்கும் சம்பளமும் அடையும் கவுரவமும் தான் என்று நாம் நினப்பதைத்தானே அந்த குழந்தைகளும் கற்றுக்கொள்ளும்? அப்போ அவர்களுக்கு சரியான வழிகாண்பிப்பது நம் கடமை அல்லவா? பணம், சம்பாத்தியம் முக்கியம் என்றாலும் அதுவே வாழ்க்கை ஆகி விடுமா?

Sunday, August 26, 2012
இயற்க்கை செய்யும் வேடிக்கை
வளைந்து நெளிந்து ஓடும் பாதை
மலையை துளைத்த நதிப்போல்
மரங்கள் பூக்கள் செடிக்களால்
அலங்கரித்த காவியமாய்
மேகங்களின் மூட்டம்
உருவங்களின் மாயம்
வெள்ளியின் ஓரத்துடன்
ஜொலிக்கும் பஞ்சு மெத்தை
இங்கும் அங்கும் தெளிவாய்
சிறிய அலைகள் மிதக்க
பளிச்சென்று கண்ணாடிபோல்
குட்டைகளும் ஏரிகளும்
பறவைகளும் வியக்க வைக்கும்
எத்தனை வகையில் பறக்கும்
நிறங்களும் உருவங்களும்
படைத்தவனை போற்றும்
குளிர்ந்த காற்று வீசும்
மிதமாய் மனது சிலிர்க்கும்
இனிய மணம் மிதக்கும்
மனதை அமைதிப்படுத்தும்
இரண்டே நாள் போதும்
இந்த அனுபவம் புதுப்பிக்கும்
தளர்ந்த மனதைக்கூட
மறுபடியும் ஊக்கவிக்கும்
மலையை துளைத்த நதிப்போல்
மரங்கள் பூக்கள் செடிக்களால்
அலங்கரித்த காவியமாய்
மேகங்களின் மூட்டம்
உருவங்களின் மாயம்
வெள்ளியின் ஓரத்துடன்
ஜொலிக்கும் பஞ்சு மெத்தை
இங்கும் அங்கும் தெளிவாய்
சிறிய அலைகள் மிதக்க
பளிச்சென்று கண்ணாடிபோல்
குட்டைகளும் ஏரிகளும்
பறவைகளும் வியக்க வைக்கும்
எத்தனை வகையில் பறக்கும்
நிறங்களும் உருவங்களும்
படைத்தவனை போற்றும்
குளிர்ந்த காற்று வீசும்
மிதமாய் மனது சிலிர்க்கும்
இனிய மணம் மிதக்கும்
மனதை அமைதிப்படுத்தும்
இரண்டே நாள் போதும்
இந்த அனுபவம் புதுப்பிக்கும்
தளர்ந்த மனதைக்கூட
மறுபடியும் ஊக்கவிக்கும்
Sunday, August 12, 2012
வாசம்
என்றோ மலர்ந்த புஷ்பம்
அதன் வாசம் இன்றும்
எங்கோ வீசும் மெலிதாய்
மனதின் மூலையிlலே
மாயமாய் மறையும்
மறுபடியும் திரும்பும்
இன்பமான வேதனையை
இனிதாய் களறும்
நினைவுகளின் பொக்கிஷம்
இதமாய் மிதக்கும்
அதைப் பற்ற கை எழும்
தயக்குத்தடன் பின் வாங்கும்
நினைவுகளை பஞ்சுப்போல
பறக்க விடுவதில் காணும் சுகம்
அதை மனதில் அடைத்து
நாற வைப்பதில் கிடைக்காது
அதன் வாசம் இன்றும்
எங்கோ வீசும் மெலிதாய்
மனதின் மூலையிlலே
மாயமாய் மறையும்
மறுபடியும் திரும்பும்
இன்பமான வேதனையை
இனிதாய் களறும்
நினைவுகளின் பொக்கிஷம்
இதமாய் மிதக்கும்
அதைப் பற்ற கை எழும்
தயக்குத்தடன் பின் வாங்கும்
நினைவுகளை பஞ்சுப்போல
பறக்க விடுவதில் காணும் சுகம்
அதை மனதில் அடைத்து
நாற வைப்பதில் கிடைக்காது
Sunday, July 29, 2012
பேட்டி
"என்ன படிச்சிருக்கீங்க?" அவள் கேட்டாள்.
"பீ.ஈ" அவன் சொன்னான்.
"இந்த வேலைல எத்தன நாளா இருக்கீங்க?"
"மூணு வருஷமா..."
"இது உங்க முதல் வேலையா? என்ன சம்பளம்? அப்ரைசல்ல என்ன சொன்னாங்க?"
அவன் முழித்தான். "நல்ல வேலை பண்ணறேன்னு..."
"வெளி நாட்டுக்கு அனுப்புவாங்களா? அதுக்கு சம்பளம் எப்படி?"
"ரெண்டு சம்பளம்..."
"ம்ம்ம்..." அவள் இன்னும் மிருதுவான குரலில் பேசினாள். "நான் வேலை செய்வத பத்தி என்ன நினைக்கிறீங்க?"
"அது உங்க இஷ்டம்."
"எனக்கு வெளியூர்ல வேலை வாய்ப்பு கடச்சா நீங்க ஒத்துப்பீங்களா? நீங்களும் கூட வருவீங்களா?"
"ம்ம்..." அவன் தயங்கினான். இந்த கேள்வி அவனை குழப்பியது. பெண் பார்க்க வந்த இடத்தில் வேலைக்கு பேட்டிக்கு வந்தவனை கேள்வி கேட்பதைப்போல கேட்டுவிட்டு இப்படி கேட்டதும் அவனுக்கே ஒரு நிமிடம் தடுமாற்றம். ஆனால் அவன் தாய் சொல்லி அனுப்பியிருந்தாள். நிறைய தேடிய பிறகு இந்த பெண் வீட்டார் அவனைப்பார்க்க ஒப்புக்கொண்டிருந்தார். "எதையாவது ஒளறி கெடுத்துடாத!" என்று எச்சரித்து அனுப்பியிருந்தார். "உங்களுக்கு அதில்தான் இஷ்டம்னா எனக்கு ஓகே" என்று அரைகுறை மனதுடன் சொன்னான். அவனுக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை. ஆனால் ஒற்றுமை வேற்றுமைகள் தெரிந்துக்கொள்ளாமல் எப்படி இதுக்கு ஒத்துக்கொள்வது "உங்க ஹோப்பீஸ் ஒண்ணுமே சொல்லலையே."
"அதான் வாழ்க்கையே இருக்க தெரிஞ்சிக்க... அதுக்கு என்ன அவசரம்?" என்று அவன் வாயை பொத்தினாள் அவள். "ஓ, முக்கியமா, சமைக்க தெரியுமா? பிகாஸ் எனக்கு நோ இன்ட்ரெஸ்ட் இன் மானேஜிங் தி ஹவுஸ்."
என்ன ஒரு அழகான சிரிப்பு சிரித்தாள்!

Subscribe to:
Posts (Atom)