மூங்கில் ஒரு குழலாக
குழலிலிருந்து உன் இசையாக
உன் இசை இதயங்களில் குடிபோக
உன் இதழ்கள் என்னை உயிர்ப்பிக்க
எழும் நாதமே என் ஜீவன்
அதுவே அல்லவோ உன் அடையாளம்?
என்னை பிரிய எப்படி வந்தது மனம்
துடித்து வெடித்தது என் நெஞ்சம்
இசையை மறந்து கிடந்தேன் நான்
உயிரற்று மறக்கப்பட்டேன் நான்
இசை வசித்த இதயங்கள்
அதில் மறுபடியும் வாழத் துடித்தேன் நான்
அன்பு கரங்கள் என்னை தழுவும்
ஆனால் உன்னையே நினைக்கும்
என்னைப் போல அதுவும் துடிக்கும்
மறக்கப்பட்ட உயிர் இறக்கத் தவிக்கும்
அவளுக்குண்டு மறுபிறவி
உன்னை அடைய ஏதோ ஒரு வழி
நீயே சொல் எனக்கென்ன கதி
என்னதான் என்னுடைய விதி?
உன் பெயருடன் இணைக்கப் பட்டேன்
புகழையும் அன்பையும் பெற்றேன்
உன் இசையை எல்லோரிடமும் சேர்த்தேன்
இசைத்தும் உன் கரங்களுக்காக தவித்தேன்.
குழலிலிருந்து உன் இசையாக
உன் இசை இதயங்களில் குடிபோக
உன் இதழ்கள் என்னை உயிர்ப்பிக்க
எழும் நாதமே என் ஜீவன்
அதுவே அல்லவோ உன் அடையாளம்?
என்னை பிரிய எப்படி வந்தது மனம்
துடித்து வெடித்தது என் நெஞ்சம்
இசையை மறந்து கிடந்தேன் நான்
உயிரற்று மறக்கப்பட்டேன் நான்
இசை வசித்த இதயங்கள்
அதில் மறுபடியும் வாழத் துடித்தேன் நான்
அன்பு கரங்கள் என்னை தழுவும்
ஆனால் உன்னையே நினைக்கும்
என்னைப் போல அதுவும் துடிக்கும்
மறக்கப்பட்ட உயிர் இறக்கத் தவிக்கும்
அவளுக்குண்டு மறுபிறவி
உன்னை அடைய ஏதோ ஒரு வழி
நீயே சொல் எனக்கென்ன கதி
என்னதான் என்னுடைய விதி?
உன் பெயருடன் இணைக்கப் பட்டேன்
புகழையும் அன்பையும் பெற்றேன்
உன் இசையை எல்லோரிடமும் சேர்த்தேன்
இசைத்தும் உன் கரங்களுக்காக தவித்தேன்.
அருமையான ஆழமான அர்த்தமுள்ள கவிதை.
ReplyDeletenanri, ram the great
Delete