Tuesday, August 2, 2011

Oru Ekkam - The Longing (sirukathai)

சூரியன் அஸ்தமிக்கும் நேரும். அந்தி வேளையில், ஜன்னல் அருகே நின்ற நான், ஏதோ ஒன்றை தேடினேன்.

ஒரு இனிய ராகம், மெல்லிசையாக என் மனதில் ஓடியது. அலைபோல் எண்ணங்கள் குதூகலித்தன. பசுமையான மரங்களும், நெருப்பை போல அதை சூழ்ந்த மலர்களும் என் இதயத்தில் குளுமையாக நிரம்ப.

ஆனால், ஒரு சஞ்சலிப்பு. எங்கே அவன் என்று தேடினேன். என் வாழ்க்கைக்கு அர்த்தம்ளிக்க வெள்ளை குதிரை மேல் வரும் கதாநாயகன், இனியும் அவனை எதிர்பார்ப்பது சரியா? ஒரு குடும்பம் என்று ஆன பிறகு, இன்னொருவனை தேடுவது?

பின்னாலிருந்து என்னை யாரோ பார்ப்பது போல் தோன்றியது. யார் என்று திரும்பிப்பார்த்தேன். கண்ணும் கண்ணும் கலந்தன. ஒரு புன் முறுவலுடன் அவன் "இதைப்பார்" என்று தன கழுத்தில் மாட்டியிருந்த காமெராவை என்னிடம் நீட்டினான். குழந்தைகள் ஓடி அருகில் வந்து, அம்மா! என்று அழைத்தன.

வெளியே தேடுவது என்னிடம் ஏற்கனவே இருக்கிறதே! என்று புரிந்து கொண்டேன். எனக்குள் வாசித்த மெல்லிசை இங்கிருந்துதானே உருவாகிறது என்று அறிந்து கொண்டேன். என் முன் இல்லாமல் என்னை கனிவாய் தாங்கி கொள்ளும் இதுவே என் உலகம்.

"போகலாமா?" என்று கேட்ட உடனே தலையை ஆட்டி, சிறுவர்கள் கையை பற்றி அவர் பின்னே செல்லும் பொழுது, என் கதாநாயகன் என்னுடனேயே இருப்பது போல் ஒரு சந்தோசம். அதை அரிந்து கொண்ட மகிழ்ச்சி.


No comments:

Post a Comment