டாக்ஸியிலிருந்து மல்லிகா இறங்கினாள். வீட்டைப் பார்க்கும் பொழுது இடி விழுந்தது போல் தோன்றியது. ஒரு வருடம் கூட ஆகவில்லை, அதற்குள் எந்த வித பராமரிப்பும் இல்லாமல் பழுது படிந்து, பாழடைந்து கிடந்தது. கண்ணில் தேம்பி நின்று கண்ணீரை மறைக்க முயன்று, டிரைவருக்குக் காசை கொடுத்து அனுப்பிவிட்டு, பெட்டியைத்தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள். பையிலிருந்து சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்தாள். உள்ளே தூசி படிந்திருந்தது. மூக்கை மூடிக்கொண்டு, என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு நிமிடம் இங்கும் அங்கும் பார்த்துவிட்டு, பெட்டியை வாச அறையில் வைத்து, துடைப்பம் இருக்க வேண்டிய இடத்திற்கு சென்றாள். ட்ரெயினில் வந்த கிளைப்பு, மேலும் பூமியிலிருந்து எழும் தூசி... அப்படியே போட்டுவிட்டு வெளியே வந்தாள். எல்லோருக்கும் முன்னாடி வர வேண்டிய அவசியமென்ன? மூத்த மகள், பொறுப்பெடுத்து பழகி விட்டது.
Tuesday, March 21, 2017
Saturday, February 25, 2017
இக்கரைக்கு அக்கரை - II
ருக்கு மனதில் அலைப்பாய்ந்தது . அவன் காதலித்தவளைத் திருமணம் செய்துக் கொள்ள முடியாததற்காக வருந்துவதா, தன்னிடம் மறைத்ததற்காக கோபப்படுவதா, இல்லை தன்னை ஏமாற்றிவிடுவானோ என்று பயப்படுவதா?
பதினோரு வருடங்கள் பட்டாபியுடன் குடும்பம் நடத்தின அவளிடம் இவ்வளவு பெரிய விஷயத்தை அவன் மறைத்திருக்கிறான். தனக்கு அதைப்பற்றி சந்தேகம் கூட எழவில்லையே?
பதினோரு வருடங்கள் பட்டாபியுடன் குடும்பம் நடத்தின அவளிடம் இவ்வளவு பெரிய விஷயத்தை அவன் மறைத்திருக்கிறான். தனக்கு அதைப்பற்றி சந்தேகம் கூட எழவில்லையே?
Tuesday, February 21, 2017
இக்கரைக்கு அக்கரை - I
"ருக்கு, ரெடியா? எனக்கு ஆஃபீஸுக்கு லேட்டாகிறது," பட்டாபி குரல் கொடுத்தான்.
"வந்துட்டேன்னா," என்று பையையும், 10-வயது மகள் சுமித்ராவையும் அழைத்துக்கொண்டு பரபரப்புடன் வந்தாள் அவள். "வரேன் மா," என்று மாமியாரிடம் விடைப்பெற்றுக்கொண்டாள்.
"வந்துட்டேன்னா," என்று பையையும், 10-வயது மகள் சுமித்ராவையும் அழைத்துக்கொண்டு பரபரப்புடன் வந்தாள் அவள். "வரேன் மா," என்று மாமியாரிடம் விடைப்பெற்றுக்கொண்டாள்.
Friday, February 10, 2017
பூ கிளப்பிய புயல்
..
"பெண்கள் பூ போல, புஷ்பா, மென்மையானவர்கள் " அவள் தந்தை சோமசேகரன் சொன்னது அவளுக்கு நினைவிற்கு வந்தது. தினம் ஸ்வாமிக்கு பூஜை செய்யும் பொழுது அது நினைவிற்கு வரும். கண்களில் இரு நீர் துளிகள் தேம்பி நிற்கும். "அவர்கள் செல்லும் இடமெல்லாம் நறுமணத்தை பரப்ப வேண்டும்... அது தான் பெண்களுக்கு அழகு..."

Friday, February 3, 2017
கைக்கட்டு
கட்டில் தொங்கிய தன் கையைப் பரிதாபத்துடன் பார்த்தான் செல்வம். கும்பல் நிறைந்த பஸ்ஸில் ஏற பயமாக இருந்தது. உடைந்த கை, யாராவது தெரியாமல் தள்ளி விட்டாலும் மேலும் காயம் படும்... அந்த வலியை நினைத்தாலே! அப்பப்பா!!!
Monday, January 16, 2017
தடை கட்டுகள்
ஆடி ஓய்ந்த சிவா என்னும் சிவகாமி வீட்டிற்குள் நுழையும் பொழுது அவள் தாய் சரளா அவளை என்றும் இல்லாத மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள். அதாவது, இன்று புன்னகைத்தவிதம் மற்ற நாட்களைவிட ஏதோ காரணத்தினால் இன்னும் மலர்ந்திருந்தது போல் தோன்றிற்று சிவாவிற்கு.
அதற்கு காரணமும் இதோ, கூடவே சொன்னாள்.
அதற்கு காரணமும் இதோ, கூடவே சொன்னாள்.
Monday, December 12, 2016
வருமா வராதா
![]() |
| விழுந்த கிளைகளை எப்படி ஓரம் கட்டுவது? |
சின்ன வயதில் இதை கற்றுக்கொண்ட ஞாபகம். 'நாடா' என்ற புயல் அவிழ்ந்தது. 'வராதா ' வருமா வராதா என்ற ஜோக்குகளை மிஞ்சி 'நான் வந்துட்டேன்!' என்று தன் வலிமை மீது சந்தேகப்பட்ட சென்னை வாசிகளுக்கு ஒரு பெரிய பாடம் கற்பிக்கும் வண்ணம் வந்துவிட்டது!
Subscribe to:
Posts (Atom)