Sunday, July 3, 2011

EMI Thollai - sirukathai

நிர்மலா மௌனமாக அவள் கணவன் பார்த்திபன் பேசுவதை கேட்டாள். அவன் சொல்வதிலும் நியாயமிருந்தது. இருவருக்கும் கல்யாணமாகி இரு வருடங்கள் தான் ஆகி இருந்தன. வயதும் முப்பதுக்கு குறைந்தது. என்ன அவசரம் இப்பொழுது, குழந்தைக்கு?

"கார் வாங்கி மூன்று மாதம தான் ஆகியிருக்கிறது நிம்மி," என்று பரிவாக நினைவூட்டினான். "வீடு வாங்கற பிளான் வேற..."

தலை குனிந்தாள். "வீடு பிறகு கூட..." என்று மெதுவாக சொன்னாள்.

"ஈ.ம.ஐ. அதிகம் பே பண்ண வேண்டி இருக்கும். அப்புறம் படிப்பு செலவுக்கு ஒண்ணுமே இருக்காது. உன்னாலயும் வேலைக்கு போக முடியாது, இல்லையா? நான் ஒருவன் சம்பாதிப்பது எப்படி போரும்?"

யோசித்துப்பார்த்தால் அவன் சொல்வது சரிதான். குழந்தை பிறந்தபிறகு, அவள் அலுவலகத்தில் வேலை செய்யும் நித்யாவைப்போல திண்டாடகூடாது என்று அவள் தீர்மாநித்திருந்தாள். அந்த குழந்தை பள்ளியிலிருந்து திரும்பும் நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். உடம்பு சரியில்லை என்றால் நித்யா படும் வேதனை! அப்பா! பார்க்கிரவர்களுக்கே அனுதாபம் ஏற்படும். அவளும் இப்படித்தான், ஈ.ம.ஐ. தொல்லையினால் வேலை செய்தே ஆக வேண்டும் என்ற நிலமை. வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதியும் இல்லை. இவ்வளவு படித்து வீணாக்கவும் இஷ்டமில்லாமல் முழித்துக்கொண்டிருந்தாள்.

 **

அலுவலகித்திர்க்குள் நுழையும்பொழுதே கண்மணி தான் கண்ணில் பட்டாள். அவள் இந்த அலுவலகத்தில் வரவேற்பாளராக பணி  புரிந்தாள்.

"என்ன கண்மணி,  ரொம்ப நாளா ஆளை காணோம்?" என்று கேட்டப்படி நிர்மலா ஜிச்டரில்  சய்ன் செய்தாள்.

சிரித்துக்கொண்டே கண்மணி சொன்னாள், "அமாம் மேடம், உடம்பு சரியாக இல்லை."

என்ன என்ற பாவனையில் நிர்மலா அவளை ஏறிட்டாள்.

"மாசமாக இருக்கிறேன்" என்று கண்மணி முகம் சிவக்க கூறினாள்.

ஹா! என்று இருந்தது நிர்மலாவிற்கு. "கல்யாணமாகி ஆறு மாதம் தானே ஆகிறது?" என்று கேட்டே விடடாள்.

"அமாம்," என்று தலை ஆட்டினாள் கண்மணி. "சீக்கிரமா இந்த வேலையெல்லாம் முடித்துக்கொள். வயதாக ஆகா கஷ்டப்படுவாய்ன்னு அம்மா சொன்னாங்க."

"என்ன கஷ்டம்?" என்று நிர்மலா கெட்டாள்.

"அதுங்க பின்னாடி ஓடி ஆடறது எல்லாம் சரமமாக இருக்கும். முப்பதுக்குள்ள பெத்துண்டா அதெல்லாம் சௌகரியமாக இருக்கும். அதுங்க பள்ளி போக ஆரம்பிக்கற வேளைல  நாம வேலை பார்க்க களம்பலாம். வேலை கூட சுலபமா கடைக்கும், இல்லையா?"

"ஒண்ணும் வாங்க முடியாதே? ஈ.ம.ஐ.க்கு என்ன செய்வே?"

"நம்ப வசதிக்கு ஏற்றதா வாங்க முடியாதா என்ன?" என்று அவள் துணுக்காக பதிலுட்ட்றாள். "செலவ கோரச்சிண்டு, சேமிச்சா எல்லாம் முடியம் மேடம்," என்று அவள் தையிரியமாக சொல்லும் பொழுது நிர்மலாவுக்கு ஏதோ மாதிரி இருந்தது.

நம்மை விட குறைந்து படித்த இவளுக்கு இருக்கும் தைரியம், விவேகம் கூட நமக்கில்லையே என்று. அகலக்கால் நீட்டுவது தேவைதானா என்று மனம் கேட்ட கேள்வியை அப்படியே அடக்கினாள். இது அவள் மட்டும் எடுக்கும் முடிவல்ல. பார்த்திபனின் தகுதிக்கு கொடுக்கும் மரியாதையும் கூட என்று தனக்குத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு அவள் தன வேலையை கவனித்தாள்.






No comments:

Post a Comment