Saturday, July 23, 2011

Santhi Nilava Vendum - May Peace Reign

கீழே போய் விளையாடு என்று சொல்வதற்குக்கூட தாய்மார்கள் பயப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. சில பிரச்னைகள் மேற்க்கத்திய நாடுகளில்தான் நடக்கும் என்று ஏளனமாக சிரிப்பது கூட உண்டு. நம் கலாசாரம், குடும்பத்தில் ஈடுபாடு, குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்லப் பண்பு- இவைத்தானே எல்லா தாய்களின் குறிக்கோளும் என்று நான் நம்புவதும் கூட!

ஆனால், செய்தித்தாள்களில் வரும் செய்திகளைக்கண்டால் யார் இந்த அரக்கர்கள் - சிறு கொழந்தைகளுடன் தவறான உறவு வைத்துக்கொள்ள எப்படி மனம் இடம் கொடுக்கிறது? எப்படி அவர்களை ஒரு பொம்மைப்போல கொன்று தூர எரிந்து விட்டு செல்ல முடிகிறது? முதியோர்களை கட்டிப்போட்டு, அவர்களை கொன்று, அவர்களிடமிருப்பதை பறிக்க மனம் வருகிறது?

என்ன, உலகம் புரியாத மக்காக இருக்கிறேன், வெகுளி என்று நினைக்கிறீர்களா? எனக்குள் துடிப்பது ஒரே சிந்தனையே. மறுபடியும் பழைய பழக்க வழக்கங்கள், நிம்மதி தரும் அமைதியை நான் மட்டும் தேடிச்செல்லாமல் மற்றவர்களையும் அழைத்துச்செல்ல வேண்டும் என்று. என்ன, முன் காலத்தில் மட்டும் இதெல்லாம் இல்லையா என்று தெரியாதா? இருக்கலாம். இல்லாமல் இருந்தால் காவல், ராணுவம் என்றெல்லாம் இருந்திருக்காது. ஆனால், இன்று பிரச்னைகள் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. மனதில் நிம்மதி குறைவதனால் இப்படிப்பட்ட விபரீதமான சிந்தனைகளும் அதிகரிக்கின்றன.

சாந்தி நிலவ வேண்டும் - கவி பாடியது பொய்யாகக்கூடாது... அதற்க்கு என்ன வழியோ அதை செய்ய நாம் எல்லோருமே கடமைப்பட்டிருக்கோம்.


1 comment:

  1. அன்புள்ள தோழிக்கு,
    கொஞ்சு மொழி மாறாத பிஞ்சு சிறுவன்
    அஞ்சு வகுப்பு தாண்டாத அப்பாவி
    விபரீத உறவுக்கு முயன்ற முரடர்களால் மூச்சடங்கிப் போனான் என்ற செய்தியை நான் வாசித்த போது என் மனம் அழுதது.

    மனிதர்கள் மிகுந்தோம், மனிதம் தொலைத்தோம்.
    இதற்கு காரணம் அதே பள்ளி மாணவர்களாம், என்னால் இன்னம் நம்பத்தான் முடியவில்லை.

    நீங்கள் சொன்னது போல் அந்தக் காலங்களில் இவைபோல இல்லாமல் இருந்திருக்காது. ஆனால் இக்காலத்தில் ஊடகங்களால் இவை உலகறியப்படுகிறது.

    சினிமாவும் சின்னத்திரையும் பூடகமாக பல புதிய செய்திகளை அறிமுகம் செய்துவைக்கிறது. அதைப்பற்றிய ஆழ்ந்த கருத்தில்லாமல் இளைய சமுதாயம் மாயமான் தொடரும் வேலை செய்கிறது.

    இன்னம் தெளிவாக சொல்லவும் இல்லையேல் சொல்லாமல் இருக்கவும்... என்று ஊடகங்களுக்கு உணர்த்தவேண்டும்.

    அன்புடன்
    ஸ்ரீகருணேஷ்

    ReplyDelete