அதற்கு என் மேல் என்ன கோவமோ தெரியவில்லை. பத்து வருடமாக உன்னுடன் இருக்கிரேன், நீ புதுசாக வந்த பழைய காருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாய் என்று எண்ணுகிறதோ என்னவோ. அதைப்பற்றி நான் மிகவும் கவலை பட்டேன். சிறிய தூரங்களில் எடுத்துச்சென்றால் ஒரே தகராறு தான் - வரமாட்டேன் போ என்பது போல்.
ஆனால் நேற்று, வெகு நாட்களுக்கு பின்னர், ஓர் தூரத்து பிரயாணத்திற்கு எடுத்து சென்றேன். அவ்வளவு அழகாக என்னை அழைத்துசென்றது.
அதற்க்கு கூட ஆறாம் அறிவு இருக்கிறதோ? பழகிய என்னை விட்டு அன்னியரை நம்புகிறாய் என்று யோசிக்கிறதோ என்னவோ!
தாயே, உன்னை நான் மறவேன். தயவு செய்து சரியாக, மிரளாமல் வா.
” தாயே, உன்னை நான் மறவேன் “ - இத்தனை நாள் சுமந்ததால்..ஆம் அதுவும் தாய்தான்.
ReplyDelete.
ReplyDelete