Sunday, June 19, 2011

Narumanam - Kavithai

 காட்டின் ஒரு மூலையில்
பெரிய மரங்களுக்கு நடுவில்
ஒரு சிறிய பூச்செடி

அதற்க்கு பூமியே தாய்
வானமே தந்தை
காட்டு ஜீவராசியே நண்பர்கள்

அதில் ஒரு சிறிய மொட்டு
அந்த மொட்டு மலர
அதை பார்பவர்கள் அதன் குடும்பத்தினரே

அதன் நறுமணம் நாப்புரமும் பரவ
அதை ரசிப்பார் யாரும் இல்லை
அந்த அழகை காண ஒரு மனிதனாவது வேண்டுமே?

அதன் வாழ்க்கையும் முடிந்தது
ஒரு நாள் - ஒரே ஒரு நாள்
இருந்த வேளையிலும் நன்மைக்கே

அது வாடி விழுந்தது
அதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
அதை வர்ணிக்க யாருமே இல்லையா!

அதனால் அதன் ஜீவன் அர்த்தமற்றதா?
புகழும் பெயரும் இல்லையேல்
அதன் மணம் மணமல்லவா? 

ஏன் திரிகிறோம் பெயருக்கும் புகழுக்கும்?
நமக்கு வாழ்க்கை படைத்தவன்
நம் புகழை பார்ப்பானா?

அல்ல, நாம் செய்த காரியத்தையா?
நம்மால் யாருக்கு நன்மை?
நாம் வீசியது நறுமணமா?

1 comment: