Saturday, December 31, 2011

வரவு எட்டணா

தப்பான நாள், இதைப்பற்றி எழுத. இன்று முதல் இன்னும் இரண்டு நாளைக்கு புது வருஷத்தை வரவேற்க காசு 'தண்ணியாக' ஓடும். அதனால் ஏதாவது மாறி விடுமா? இல்லை, ஆனால் இதில் தான் சந்தோசம் என்று நினைத்தால்...போகட்டுமே!

இரண்டு நாள் முன்னாடி இந்தப்பாட்டை பார்த்தப்பிறகு எனக்கு நம் வாழ்க்கையை நினைத்து சிறிப்பு தாளவில்லை. 'வரவு எட்டணா செலவு பத்தணா' என்று பாலய்யா பாடும் பாட்டு இன்னிக்கு யாருக்கு தான் லயிக்கும்? ஒரு காலத்தில் இருப்பதை வைத்து தான் சமாளிக்க வேண்டும். அதிலும் காசு மிச்சப்படுத்த வேண்டும் என்று பெரியவர்கள் குறியாக இருந்தார்கள். இன்று, வீடு மட்டும் இல்லை, வீட்டுப் பொருள்களையும் கடனுக்கு வாங்கி விடலாம். ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் எழுதுகிறார் - கடன் வாங்காதே, கடன் கொடுக்காதே, என்று. இன்று நம்மில் யாராவது அப்படி இருக்கிறோமா?

கிரெடிட் கார்ட் வந்ததில் இருந்து மளிகை சமான் கூட கடன் தான். அந்த காலத்தில் மளிகை கடையில் மட்டும் தான் அக்கௌன்ட் வைக்கப்படும். இன்று வங்கியிடம் கடன் வைக்கிறோம் எல்லா விஷயங்களுக்கும்.

கடைசியில் தொம்தனா தொம்தனா தொம்தனா...

Tuesday, December 27, 2011

தொழில் சுத்தம்

இன்று காலை ஒன்பது மணிக்கு நாங்கள் ஐவர் ஒரு ப்ரோக்ராமிற்காக ரெடியாக இருக்க வேண்டிய நிர்பந்தம். எங்களை ஆடும் இடத்திற்கு ஏழு மணிக்கே வர சொல்லி விட்டார் மேக் அப் போட வேண்டியவர். நாங்களும் சமர்த்தாக போய் சேர்ந்து விட்டோம். ஆனால் அவரோ, எட்டு மணியாகியும் வந்து சேரவில்லை! வேறு எதோ குழுவிற்கு மேக் அப் போட்டு விட்டு வந்தார். அதனால் நாங்கள் தயாராக பத்து மணி ஆகி விட்டது! எங்களை முதலில் ஆட அனுப்ப வேண்டிய இடத்தில் மூன்றாவதாக அனுப்பினார்கள். "இன்னும் தயார் ஆகாவில்லையா" என்ற கேள்வி வேறு!

நன்றாக தான் போடுகிறார், ஆனால் அதற்காக எல்லாருக்கும் மேக் அப் செய்வதற்கு ஒப்புக்கொள்வது தவறில்லையா! இது நேற்று இன்று இல்லை, எப்பவுமே நடப்பது தான். எந்த கச்சேரிக்கும் சரியாக வந்து சேருவதில்லை. ஆடுபவர்களுக்கு அவரை காணும் வரை பீதிதான்.


இந்த மாதிரி நிறைய பேர்களுக்கு ஒப்புக்கொண்டு நன்றாக சம்பாதிக்கலாம், ஆனால் நீண்ட நாட்களுக்கு தாக்கு பிடிக்க முடியுமா? அளவோடு வேலையை ஏற்று அதை நேரத்தோடு ஒழுங்காக செய்து நல்ல பெயர் வாங்கினாலே வர வேண்டியது வந்து சேராதா! இது என்ன "வேண்டாம்" என்று சொல்லத் தெரியாததனால் வரும் வினையா இல்லை, "ஐயோ போய்விடப்போகிறதே" என்ற ஐயத்தினால் வருவதா?

தொழில் சுத்தம் என்பது நன்றாக செய்வது மட்டும் அல்ல. செய்ய வேண்டிய நேரத்தில் அதை முடிப்பதும் கூட!

Saturday, December 24, 2011

மிச்சம் மீதி

 எட்டு வயதாகும் பையன் ஒருவனுக்கு பிறந்தநாள். பிச்சா கார்நேரில் வைத்து கொண்டாட்டம். பசங்கள் எல்லோருக்கும் ஒரே சந்தோசம்.

ஒரு பெரிய கேக், ஒரு பெரிய கார்லிக் ப்ரெட், இரண்டு பிச்சா துண்டுகள், ஒரு கப் ஐஸ் கிரீம் - வாய் யாருக்குத்தான் ஓராது? ஆனால், பெரியவர்களுக்கே கொஞ்சம் அதிகமாக இல்லை? என் மகன் உட்பட எல்லா பசங்களுமே திணறி மீத்தி வைத்து விட்டன. எனக்கு தான் மனசு கேட்காமல், என் மகன் பங்கையும் இன்னொரு பையன் மீத்தி வைத்த பங்கை அவனுக்காகவும் கட்டிக்கொண்டு வந்தேன். வீட்டிலாவது யாராவது சாப்பிடலாம், அல்ல என் மகனே இன்னொரு வேளை அதை சாப்பிடலாம் என்று.


ஆனால், வந்த பிறகு தான் தோணிற்று. என்னை ஒரு மாதிரியாக நினைத்திருப்பாளோ அந்த பையனின் தாய்?


ஆனால் உணவு அப்படி குப்பையில் போவதை விட என்னைப்பற்றி தப்பாக நினைப்பதினால் நான் குறைந்து போய் விட மாட்டேன் என்று என்னையே தேற்றிக்கொள்கிறேன்.

Monday, December 19, 2011

சலனம்

வானம் - ஒரே நிறம்
ஒரு முனையில் இருந்து
கண் எட்டும் தூரம் வரை
ஆனால் இதோ!
மேகங்கள் உலவ!
வானத்திலும் ஒரே சஞ்சலம்!

காற்று - எங்கே?
குப்பென்று ஒரே வெப்பம்!
மெதுவாக, வீசிய காற்று!
பேய்ப்போல் ஆடுவதேன்!
தன்னுடன் சேர்ந்து
உலகத்தையும் ஆடவைக்கிறதே!

குளம் - நீர்,
அதிலும் அசைவு
காற்று வீச
சிறிய அலைகள்
ஆறாக மாறி
கடலில் சேர்ந்து
நிலவைப் பார்த்து
அலைகள் தாவி பறக்கனவே!

நெருப்பா?
ஆடாமல் இருக்குமா?
உணவைத்தேடி
பரந்து படர
காற்றுடன் விளையாடி
தீப்பொறி இங்கும் அங்கும்
குதித்து தன்னுள் கலக்கிறதே!

பூமி - நீ ஒன்றுதான்
சலனப்படாமல்
ஸ்திரமாக நிற்ப்பாயா?
இதென்ன ஆட்டம்?
ஐயோ பூகம்பம்!
நிற்ப்பதனைத்தையும்
சாய்த்தாயா  !

இப்படி பிரபஞ்சமே சலனப்பட
மனதென்னும் குரங்கு
எப்படி ஒரு நிலை பெற!
ஒவ்வொரு புதிய அனுபவத்திலும்
அலைப்போல எழுந்து விழ
இதற்க்கு ஏது  தடை!


Friday, December 16, 2011

படகு கார்

 "உருப்படவே மாட்ட! ஒழுங்கா ஒக்காந்து படி," அம்மா கத்தினாள் மகனைப்பார்த்து.


அவனோ, தனக்கு கிடைத்த காரில் ஆழ்ந்திருந்தான். "போம்மா! நான் பார், இந்த மாதிரி ஒரு பெரிய கார் ஓட்டப்போறேன் பாரு."

"இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல! இப்படி ஊற மேஞ்சிண்டிருன்தென்ன திருடித்தான் பொழக்கணோம்!"

"ஏண்டி இப்படி பழிக்கற பையன!" தந்தை பரிந்து வந்தான். "இன்னிக்குத்தான் கிளி ஜோசியம் பார்த்தேன். பையன் பெரிய கார்ல பறப்பான்னு  சொன்னான்!"

தன தாடையை தோளில் இடித்தப்படி அவள் உள்ளே முணுமுணுத்தப்படியே உள்ளே சென்றாள்.

இருபது வருடம் கழித்து அந்த ஜோசியம் பலித்ததை பார்த்த தந்தை அவளை "எப்படி" என்ற பாவனையில் பார்த்தான். அவள் வாய்மேல் கையை வைத்து மனம் பூரித்து நின்றாள்.

பெரிய பங்களாவில் ஓட்டுனர் உத்தியோகம் கடைக்கும் பொது கூட நினைக்கவில்லை தன் மகன் இப்படி ஒரு படகு கார் ஓட்டுவான் என்று. "பென்ஸ்  மா," என்று அவன் பெருமிதப்படும் பொழுது படிக்காத அவளுக்கு அதன் அருமை தெரியவில்லைத்தான். ஆனால் அது பெரிய விஷயம் என்று அந்த கார் மினுமினுப்பதை கண்டு புரியாதா என்ன!

Monday, December 12, 2011

படகு

ஒரு குறிகோளும் இல்லை
துடுப்புகள் வெறும் தொல்லை
நங்கூரம் பற்றவில்லை
சுயேச்சையாய் மிதக்கும் படகு

திசையைப்பற்றிய கவலை
எதுவும் இதற்க்கு இல்லை
காலம் நேரம் என்றவை
இதற்குப்பொருட்டு இல்லை

எந்த சலனமும் இல்லை
ஆறு தள்ளும் திசையில்
எளிமையாக அந்த ஓடை
மிதந்து போகும் அழகை

ரசிக்க முடியவில்லை
இதற்கு வேண்டும் கொள்கை
என்று அதை தடுத்து
ஒரு கயிற்றை கட்டி

சுமையை ஏத்தி
துடுப்பை எடுத்து
படகை ஓட்டி
ஒரு திசை கொடுத்து

மேலும் கீழும் செல்ல
வாழ்க்கையே நொந்து
விட்டுவிடு என்று கெஞ்சி
முடிவை தேடும் படகு.

Sunday, December 11, 2011

தாய்மை

 சாக்கடையில் வீடு
குப்பைத்தொட்டி தட்டு
அதில் விழும் குப்பை தான்
விரும்பி உண்ணும் உணவு

நெருங்கினாலே நாத்தம்
முகம் சுளிக்க வைக்கும்
'பன்னி'! ஒரு இகழ்ச்சொல்
இப்படி ஒரு பிறவி தேவையோ!

எனிலும், தாயாகப்போகிற
அந்த கரும் பன்னி
பசுமையான மெத்தையை
கனிவுடன் உருவாக்கி

பிறக்கப்போகும் குட்டிகளுக்கு
என்ன கனவெல்லாம் காணும்?
பன்னிக்குட்டி என்றாலும்
அவை அதற்க்கு ராஜகுமாரர்களே!



Friday, December 9, 2011

காலம் மாறியதா?

இந்த காலத்துப்பசங்களுக்கு என்ன தெரிகிறது? பெரியவர்களுக்கு மதிப்புக்கொடுக்கக்கூட தெரியவில்லையே என்ற களைப்பு எனக்கும் உண்டு, என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் உண்டு! எல்லா இடத்திலும் ஏதாவது ஒரு குறை - வளர்ந்த விதம், மணவாழ்க்கை நடத்தும் விதம், உறவுகளும் அதை பராமரிக்கும் விதமும்... வேலை செய்யும் இடத்தில்! எங்கே தான் இந்த பெரியவர்களுக்கு சிரியவர்களைப்பற்றி குறை இல்லை!

அகதா கிறிஸ்டியின் ஒரு கதை படித்துக்கொண்டிருந்தேன். அது ஒரு அறுபது எழுபது  ஆண்டுகளுக்கு முன்னே எழுத பட்டிருக்க வேண்டும். அதிலும் பெரியவர்கள் சிரியவர்களைப்பற்றி இதைத்தான் சொல்கிறார்கள்!

அப்போ நாம் அடிக்கும் டயலாக் கூடவா மாறவில்லை? நம்மைப்பற்றியும் நம் "ஜெநேரஷனைப்" பற்றியும் நாம் பீத்திக்கொள்வது வெறும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது தானே? நம்மையும் பெரியவர்கள் கடுப்படித்திருக்கிரார்கள். நாமும் அதையே தான் செய்து வருகிறோம்.

என்ன முன்னேற்றமோ!


Tuesday, December 6, 2011

வேற்றுமை

கிளிகள் ஒரு கிளையில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்தன. ஏற்கனவே உலகை ஒருமுறை விடிய காலையில் சுற்றி வந்தாயிற்று. காக்கையும் புறாவும் கூட களைப்பாற உட்கார்ந்திருந்தன.


இதென்ன! திடீரென்ற பூகம்பம்போல ஒரே அதிர்வு! சத்தம்! ஐயோ! மனிதர்கள் வராத இடமாச்சே இது! அவன் ஏன் இங்கு நுழைகிறான்?

பறவைகளெல்லாம் அந்த பக்கமே நோக்கி நின்றன. உறங்கிக்கொண்டிருந்த அணிலும் எழுந்தது. கீரிப்பிள்ளை, தட்டுத்தடுமாறி மேற்கிளைகளில் ஒளிந்துக்கொண்டன.

ஒரு சிரியதலை எட்டிப்பார்த்தது. அது ஓசையின்றி மரம் ஏறியது. ஆனால் அது வருவது எப்படியோ அந்த கிளிகளுக்கு தெரிந்துவிட்டது! கீச்சுக்கீச்சென்று  ஒரே கூச்சல். அணிலும் எட்டிப்பார்த்தது. "இவன் எங்கே இங்கு வந்தான்?" என்று காக்கைகள் எம்பிப்பார்தன.

"எனக்கு பயமாக இருக்கிறது," என்று அந்த புதியவரவு கெஞ்சியது.

அவன் பாஷை இவர்களுக்கு புரியவில்லை, ஆனால் யூகிக்க முடிந்தது. எல்லாருக்கும் மனிதனைக்கண்டால் பயம்தானே! ஆனாலும், எதிரிக்கு எதிரி என்று இவனை கணக்கில் சேர்க்கமுடியாது. கூடவே இருந்து குழி தோண்டுபவன்.  "சீ போ!" என்று அணில் தையிரத்தை வரவழித்து அதை தாக்கியது. அவன் சீறினான். "பார்த்தாயா! இப்படித்தான் இவன்," என்று கிளிகள் ஒன்றை ஒன்று பார்த்தன. "விரட்டு இவனை!"

"சரி சரி, நான் போகிறேன்," என்று அவன் சுயகவுரவத்துடன் நெளிந்தான். அவர்களை தாண்டும் பொழுது, அவன் தலை சற்றே நிமிர்ந்திருந்தது. பின்னாலிருந்து ஒரு கிளி கொத்தப்பார்தது. பின் புறம் திரும்பி சீறினான் அவன். "அதான் போகிறேன் என்றேனே!"

அவனை நம்ப முடியாமல் கிளிகளும் அணிலும் அவன் கீழே இறங்கும் வரை காவல் இருந்தன.


"ச்சே! நானும் இவர்களைப்போல மனிதனிடமிருந்து ஒதுங்கத்தானே வந்தேன்!" என்று அலுத்துக்கொண்டான் அவன்.


ஏதோ ஒரே கூச்சல். "நிசப்தமாகவே இருக்கத்தேரியாதா இவர்களுக்கு!" என்று மனிதர்களையும் ஏசிக்கொண்டே அவன் வழி செல்லும் பொழுது அவன் முதுகில் ஒரு கட்டை வேகமாக விழுந்தது. "ஸ் ஸ்" என்று சீரப்பார்த்த அவன் தலையில் பலமாக ஒன்று விழுந்தது.

"பாம்பு டா!  அடிச்சிக்கொல்லு!" என்று மனிதர்கள் அந்தப்பாம்பை அடிப்பதை பார்த்துக்கொண்டிருந்த கிளிகள் பேசிக்கொண்டன, "இந்த மனிதனே இப்படித்தான்! நம்பவேக்கூடாது!"

"அவனுக்கும் தேவைதான்! எவ்வளவு பாடு படுத்தினான் அவன் நம்மை!" என்றது மற்றொன்று.

"பதுங்க இடம் கொடுத்திருக்கலாமோ?"

"சும்மா இரு! அவனை நம்பவே முடியாது! இடத்தைக்கொடுத்தால் மடத்தைப்பிடிப்பவன்!"

Friday, December 2, 2011

ஆசை

சிறகுகள் இல்லை
பறக்க ஆசை
நடக்கவில்லை
ஓட ஆசை

பிறப்பு ஆசை
வாழ்க்கை ஆசை
வாழ்வின் ஒவ்வொரு
தருணமும் ஒரு ஆசை

திணறியும் திண்டாடியும்
முட்டியும் மோதியும்
நீந்தமுடியாமலும்
நீரில் தத்தளித்தும்


போராடி புறண்டு
நிமிர்ந்து நிற்க ஆசை
எல்லோரும் தன் பெயர்
சொல்லவேண்டும் என்றாசை

கடைசி வரை
ஒரு முயற்சி
அதில் இறப்பு மட்டும்
வெறும் நிராசை.

Monday, November 28, 2011

எதற்கு விதிவிலக்கு

பணக்காரன் மகன்
வெளிநாட்டில் வேலையாம்
உள்நாட்டில் வசிக்கும் தந்தைக்கு
சோறு போட முடியலையாம்


அவன் எனக்குச் செய்தது
தந்தையின் கடமைத்தானே!
எனக்கு தன் சொத்தைக்கொடுப்பதும்
இந்நாட்டின் முறைதானே!

கூட்டை விட்டுப்பறவை
பறப்பது இயற்கைத்தானே
நான் செய்வதை மட்டும்
யாவரும் பழிப்பானே!

என்று கேட்கும் அவனுக்கு
இன்று ஒரு சட்டம் வருவது
நம் கலாச்சாரம் என்ற பெருமைக்கு
பெரிய ஒரு இகழ்ச்சித்தானே!

அடுத்து வரும் நாட்களை
நினைத்து மனம் கலங்குமே!
குழந்தைகளை வளர்ப்பதற்கும்
ஒரு சட்டம் வந்துவிடுமே!


நம் முன்னேற்றத்திற்கு
மேல்நாடு வழி காட்டி
அதனை பின் பற்றும் நமக்கு
இதில் ஏன் விதிவிலக்கு?




Sunday, November 27, 2011

மனதில் ஆடும் நிழல்கள் - சிறுகதை

தாயின் விவாதமும் சரிதான். "வயதாகிக்கொண்டே போகிறது, இன்னும் எத்தனை வயது வரில் தான் கல்யாணத்தை ஒதுக்குவது?"

"வேலை..." என்று ஆரம்பித்தாலே அவள் தாய் சீறுவாள். "வேலை முக்கியம்தான்! ஆனால் அதுவே வாழ்க்கை ஆகிவிடாது! குடும்பம், குழந்தை என்று வேண்டாமா?"

அவள் வாயை மூடிக்கொண்டு வேலைக்குக் கிளம்பினாள்.

"இன்னிக்கு சீக்கிரம் வா. வீட்டிற்கு சிலபேர் வருகிறார்கள்."

அவள் தாயை முறைத்துப் பார்த்தாள். தாய் அவளை கண்டுகொள்ளவில்லை.

**

"ஊருக்குப்போய் உன்னை காண்டாக்ட் செய்கிறேன்," என்றுச்சொல்லிச் வடக்கே சென்றவன் இடமிருந்து ஒரு தகவலும் இல்லை. எதோ ஒரு மெயில் மட்டும் வந்தது - எக்கச்செக்க வேலை என்று.

எதை வைத்து அவளும் காத்திருந்தாள்? அவன் என்ன ஐ லவ் யு சொன்னானா, கட்டி முத்தமிட்டானா, இல்லை மணம் செய்துக்கொள்கிறேன் என்றானா? இவளாகவேத்தானே நம்பிக்கையை வளர்த்துக்கொண்டிருந்தாள்? அவன் புன்னகைத்தது தனக்காகத்தான் என்று? அவன் வேலையில் ஒரு  சந்தேகம் கேட்டால், தன்னுடன் பேசுவதற்கு என்று? வண்டியில் கொண்டு விடுகிறது ஏதோ ஒரு தனிப்பட்ட சந்தர்ப்பம் ஏற்ப்படுத்திக் கொள்வதற்கு  என்று?

எதற்காக காத்துக் கொண்டிருகிறாள் இவள்?

அவள் சீக்கிரம் திரும்புவதைக் கண்டத்  தாய் முகம் மலர்கிறாள். பெண்ணை அழகாக அலங்காரம் செய்கிறாள்.

வரன் தன் குடும்பத்துடன் வருகிறான். கம்பீரமாக இருக்கிறான். நல்ல வேலையில் இருக்கிறானாம். சிரித்தமுகம், சுலபமாக பழகும் சுபாவம்.


ஆனால் அவள் மனம் ஏன் அவனுடன் வந்திருக்கும் தம்பியையே நாடுகிறது?

"ஏய்! எப்படி, ஆச்சரியமா இருக்கா என்ன பார்த்து? நீதான் பெண்ணுன்னு தெரிஞ்சதும் ரெடி ஆயிட்டேன்," என்று அவன் சொன்னப்பொழுது ஏன் யாரோ தன்னைக்கத்தியால் கிழிப்பதுப் போல ஒரு எண்ணம்?

"இந்த வரன் வேண்டாமம்மா," என்று தாயிடம் சொல்கிறாள். ஏன், என்ன கொறச்சல் அவனுக்கு என்ற பொழுது, என்ன சொல்வது என்று தெரியாமல் திணறுகிறாள்.





Tuesday, November 22, 2011

இந்தகாலத்துப்பசங்க - II

அன்று முதல் பாகம் ஒரு புலம்பல். இன்று, பெருமை.

ஒரு பள்ளியில் (ஒமேகா) நேற்று நடனப்போட்டி. ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு பிரிவிலும் ஒரு குழு அமைத்து நாட்டுப்புற நாட்யங்கள் ஆட வேண்டும். அவர்களே பாட்டைத்தேடி, தானே அதற்க்கு நடனத்தை வடிவமைத்து, வேண்டிய உடையை தயார் செய்ய வேண்டும்.

முதலாக பத்தாம் வகுப்பினர் வந்தனர். ஆஹா என்று நானும் இன்னொரு ஜட்ஜும் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தோம். அவர்கள்த்தான் நன்றாக ஆடினார்கள் என்றுப்பார்த்தால்,  இன்னும் கீழ் வகுப்புகளின் புதுமைகள் இன்னுமே இன்ப அதிர்ச்சியை கொடுத்தன!

இன்டர்நெட்டின் மகிமையை இங்கு நான் எப்படிச்சொல்லாமல் இருக்க முடியும்? அதைக்கண்டுத்தான் மெக்ஸிகோ போல நாடுகளின் நாட்யத்தை மட்டும் இல்லை, நமது நாட்டின் வெவ்வேருப்பகுதிகளில் இருந்தும் நாட்யங்களை ஆடின இந்த பசங்கள். போய் வந்து தலைவலியை எதிர்பார்த்த எனக்கு இது ஒரு பாடமாக இருந்தது.

Sunday, November 20, 2011

புள்ளிகள்

சேர்ந்திருந்தால் அழகான கோலம்
தனித்தனியாகவும் பார்க்க நேரும்
ஒரு ஜாலம் பின்னும் அற்புதம்
சிறியது பெரியது என்று பலவகையும்!

சிறிய புள்ளிக்கு என்ன கோவம்?
பெரிய புள்ளி ஆக வேண்டும் என்ற ஆர்வம்!
இப்படியும் ஒரு ஆர்வம் ஏநாம்?
உலகில் எல்லாப்புள்ளிகளும் தானே வேண்டும்

ஆனால் பெரிய புள்ளி போடும் சத்தம்
அப்பப்பா பூமி தாங்குமா இந்த யுத்தம்!
நீயா நானா என்று எப்பொழுதும்
மற்றவனை கீழே தாழ்த்தும் வேகம்!

இதை கண்டா ஏங்கும் இந்த மனம்?
மானம் காப்பாற்றி இருக்கும் நேரம்
சிறியது பெரியது என்று ஏன் இந்த வஞ்சம்
இருப்பதை நினைத்து திருப்தி படு நீயும்.



Saturday, November 19, 2011

Lasting Impressions: The Circle

Lasting Impressions: The Circle: I admired the circle Perfect and round And stepped in to see It circle around. No beginning Nor an end No confusion Joined from end ...

Friday, November 18, 2011

இந்தக்காலத்துப்பசங்க!

 ஒரு பெரிய தொழிலதபரைப் பேட்டிக் காணச் சென்றிருந்தேன். என்னுடன் மூன்று இளைஞர்களும் இருந்தார்கள். முதலில் அந்த அதிபரை தனியாக சந்தித்து  என்ன பேசப்போகிறோம் என்று சொல்லிவிட்டு மற்றவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தேன். வீடியோ பிடித்தார்கள். எல்லாம் முடிந்தபிறகு அவர் ஒரு இரண்டு நிமிடம் நின்று பேசினார். "நீங்கள் எல்லோருமே இந்த தொழில் குழுவை சேர்ந்தவர்களா?" என்று கேட்டார்.

"இல்லை" என்று மூவரும் பதிலளித்து சும்மா இருந்தனர். அவர் தயங்கி நின்றார். நான் அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே நினைத்துக்கொண்டேன் - இந்த சில நல்லப்பழக்கங்கள் கூட இந்த காலத்துபசங்களுக்கு இல்லையே!

வணக்கம் சொல்வது, சிரித்துப் பேசுவது, போய்வருகிறேன் என்று சொல்லுவது போல பழக்க வழக்கங்கள் மறைந்துக்கொண்டிருக்கின்றனவா என்று யோசிக்க தோன்றுகிறது. எப்பொழுதும் இந்த கம்ப்யூட்டர் எதிரில் உட்கார்ந்தால் எப்படி மனிதர்களுடன் பழக கற்றுக்கொள்ள முடியும்? பெரியவர்கள் கூட இந்த சின்ன விஷயங்களை சொல்லிக்கொடுப்பதில்லையா?

நாம் ஒருவருடன் ஒருவர் பகிர்ந்தகொள்ள கூடியது ஒரு புன்முறுவல் தான். இதற்க்கு ஏன் இவ்வளவு கஞ்சத்தனம்!

Wednesday, November 16, 2011

இப்படியும் ஒரு ஆசை


மேம்பாலம் திறப்பு விழா. அந்தத் தெருவில் யாரும் அனுமதிக்கப்படவில்லை அன்று காலை. காலை நேரத்தில் இந்த உபத்த்ரவமா என்று மக்கள் மத்தியில் அலுப்பு. தட்டிக்கேட்க யாரால் முடியும், என்ற சலிப்பு. தட்டிகேட்க நேரமும் இல்லை, கேட்டு செயல் பட ஆட்களும் இல்லை.

இந்த பாலம் கட்டுவதற்கு பல லட்சங்கள் செலவழிந்ததாக பேச்சு. கட்டுவதற்கா இல்லை யார் குடும்பமோ பிழைப்பதற்கா என்று ஒரே நக்கல். எப்படியோ ஒன்று, இத்தனை நாள் அந்த சாலை பயனில்லாமல் இருந்தது. இனி பார்ப்போம், இந்த மேம்பாலத்தினால் என்ன பயன் என்று ஒரு ஆர்வம்.

திடீறன்று ஒரே பரபரப்பு! என்னப்பா, திறந்தார்களா?

ஆமாம், ஆனால் திறந்த உடனே எதோ விபத்து. எப் எம் போடு?


"மக்களே, இப்பொழுதே திறந்த மேம்பாலம், மந்திரியும் அவர் பாதுகாப்பு அணியினரும் அதை திறந்த பின் அதை கடந்து செல்ல, அந்த பாரம் தாங்காமல் அந்த மேம்பாலம் பொத்தென விழுந்தது என்று இப்பொழுதுதான் செய்தி வந்தது. மந்திரிக்கு காயமா என்று தெரியவில்லை."


ஊரே வாய் பொத்தி இருந்தது - கடவுளுக்கே போருக்க வில்லையா இவர்கள் செய்யும் அட்டூழியம்!

இப்படி எல்லா தவறுகளுக்கும் கண்ணெதிரில் தண்டனை கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!








Monday, November 14, 2011

Lasting Impressions: Warning Bells

Lasting Impressions: Warning Bells: Yesterday's newspaper said: * Sale of two wheelers in rural areas coming down because of dropping purchasing power. * Kingfisher plunging...

Sunday, November 13, 2011

குசேலர் - சுதாமா

சுதாமாவின் மனைவி அவலை கட்டிக்கொடுக்கிறாள் 
இந்த கதை கேட்டு/படித்து வளர்ந்திருக்கிறேன். ஒரு பிடி அவலைத்தின்ற ஸ்ரீ கிருஷ்ணா, பதிலுக்கு தன் பால்ய ச்நேஹிதன் குசேலரின் வாழ்க்கையையே மாற்றினார் என்று. ஏழையாக இருந்த அவனை மதித்து, வரவேர்த்து அவர் கொண்டு வந்த அவல் அவருக்கு தேவாம்ரிதமாக இருந்தது.

குசேலர் தான் யாச்சகனாக வந்திருப்பதை கிருஷ்ணரிடம் சொல்லாமல் அவர் திருப்தியாக பருந்துவதையே கண்டு மகிழ்ந்து வேறெதுவும் கேட்காமல் திரும்பிவிடுகிறார். அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. வீடு மாளிகையாக மாறிவிட்டது, வறுமையில் ஏங்கிய மனைவி, குழந்தைகள் பளபளவென ஜொலிக்கிறார்கள்.


இதை நான் நடனத்தில் சஞ்சாரி பாவமாக செய்திருக்கிறேன். மற்றவர்கள் ஆடியும் பார்த்திருக்கிறேன்! ஒவ்வொருமுறையும் என் கண்களில் தண்ணீர் வந்துவிடும்.

என்ன ஒரு தத்துவம் - குசேலர் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் தன் நண்பன் என் சொல்லக்கூடும் பரமாத்மாவிடம் ஒன்றும் கேட்கவில்லை. தன்னிடம் இருப்பதையே கொடுக்கிறான்.


"இதுதானா!" என்று இளக்காரமாக பாராமல் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று பதிலுக்கு சுதாமா நினைக்க முடியாத அளவுக்கு அவருக்கு கொடுக்கிறார். கேட்டிருந்தால் கேட்டதை மட்டும் தான் கொடுத்திருப்பார்!


கேட்காமல் பெற்றதால் குசேலருக்கும் என்ன பெருமை - சந்தோசம்.


நம்பிக்கை - நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும், முடிந்த அளவு கொடுப்போம். எவ்வளவு எளிதாக இந்த கதை இந்த பாடத்தைக்கர்ப்பிக்கறது! கற்றுக்கொள்ள நாம தயாரா?



Friday, November 11, 2011

Lasting Impressions: Siblings

Lasting Impressions: Siblings: Sham stood at the entrance, in sparkling white pajama kurta, accepting condolences. He blinked as he saw his aunt come up with a stricken lo...

Tuesday, November 8, 2011

Chinthanaiyilla Manam

அலைமோதும் மனதில்
இன்று நிலவியது நிசப்தம்
சுற்றும் முற்றிலும்
பரவியது அமைதி

இதைத்தானே தேடி
அலைந்தது நெஞ்சம்?
இன்று அது கிடைத்தும்
ஏன் இப்பொழுது கொஞ்சம் 

துலைந்து போனாற்போல்
ஒரு கலக்கம்?
பெச மறந்தாற்போல் 
ஒரு  மயக்கம்?

இந்த அமைதியை 
அனுபவித்து
மனதின் தவிப்பை 
விட்டுவிட்டு 

இதமான இந்த தருணத்தில் 
நீந்தி களைப்பாறு 
சுகத்தை ரசித்து
நிம்மதியை நீ நாடு 

Thursday, November 3, 2011

Lasting Impressions: Peeling the Layers - Meluha

Lasting Impressions: Peeling the Layers - Meluha: I think no Indian story, especially those on historical/mythological characters, can ever have just one layer. The Immortals of Meluha is no...

Tuesday, November 1, 2011

Yanthiram

மனிதன் தன்னைப்போல வேலை செய்ய யந்திரங்கள் உருவாக்கப்போகிறான் என்று சொல்லும் பொழுது, சிட்டி மாதிரி ரோபோவைத்தான் நினைத்துப்பார்க்கிறோம். ஆனால் யோசித்துப்பார்த்தால் நாமே ரோபோ ஆகி விட்டோமோ என்று தோணுகிறது.

நம் மன நிலையை குறிக்கும் கண்களை நாம் கறுப்புக் கண்ணாடிகளால் மூடுவது  மட்டும் இல்லாமல் நம் மனதையே மூடி விட்டோம். குளிர் பொட்டிக்காக வீட்டு ஜன்னல் கதவுகளை மூடி சுகமாக அனுபவிக்கும் பொழுது, வெளியில் என்ன நடந்தால் என்ன என்று தன்னை மற்ற மனிதர்களிடத்தினில் இருந்து துண்டித்துவிட்டோம். ரோட்டில் செல்லும் பொழுது காரில் பறக்கும் பொழுது உலகில் என்ன நடந்தால் என்ன, தன் வேலையை தான் பாட்டுக்கு செய்யும் நமக்கு மனித நேயம் இருக்கிறதா என்று சந்தேகம் வருகிறது! சிட்டியை போல பல உண்மைகளை ஒப்பிக்க தெரிந்த நமக்கு அதை அனுபவிக்கமுடியுமா என்ற கேள்வி மனதை துளைக்கிறது. மற்றவனுக்கு பிரச்னை என்றால் எனக்கென்ன என்று எவ்வளவு அழகாக ஒரு ரோபோவைப்போல இருக்க கற்றுக்கொண்டிருக்கிறோம்!

ஆர்டிபிஷல்  இண்டலிஜென்ஸ் என்று நாம் புதுசாக எதையும் கண்டு பிடிக்கவேண்டாம். இருக்கும் புத்தியை யந்திரம் போல உபயோகிக்கும் நம் புத்திசாலித்தனமும் இயற்கைக்கு மாறாக இருப்பதால் இதுவும் செயற்கை தானே!


Sunday, October 30, 2011

Lasting Impressions: Glory

Lasting Impressions: Glory: Glorious and radiant Resplendent and bright In rode the Sun Shining with natural light Dazzling all beholders With his flashy grin Bu...

Friday, October 28, 2011

Lasting Impressions: Lifestyle

Lasting Impressions: Lifestyle: "Have you seen today's paper?" Nikita asked Sahana. "Some discount sale?" Sahana asked eagerly. "I wanted to buy a good handbag. Is there ...

Thayakkangal

தாய்மை என்றாலே தயக்கங்கள் தான். நாம் எடுத்த முடிவு சரியா? நாம் சொல்லும் அறிவுரை சரியா? நாம் கோவிப்பது சரியா? நாம் விட்டுக்கொடுப்பது சரியா?

தீவாளி அன்று என் தோழியின் ஒரு போட்டோ பார்த்தேன். அவள் செய்த இனிப்பு கார பண்டங்களை படம் பிடித்திருந்தாள். இந்த வருடம் நான் எதையுமே செய்திருக்கவில்லை. என் குழந்தைகள் தீவாளி நாட்களை நினைவு படுத்தும் பொழுது என்ன சொல்வார்கள். "கிராண்ட் ஸ்வீட்ஸ் மிக்சர் ஞாபகம் இருக்கா?" என்று தானே பேசிக்கொள்வார்கள்? நான் பெருமையாக சொல்லுகிறேனே "எங்க அம்மா செய்யும் மிக்சர்" என்று, அந்த மாதிரி அவர்களுக்கு ஒன்றுமே நினைவு வராதே?

ஆனால் தோழி பதில் சொன்னது என்னை நெகிழ வைத்தது. "அவர்கள் சொல்வார்கள் என் தாய் புத்தகங்கள் எழுதினாள்" என்று. மிக்சர் ஜாங்கிரிக்கு ஈடு இல்லை என்றாலும் அவர்களும் பெருமை படும்படி நாம் எதோ செய்கிறோம் என்பதை மற்றவர்கள் சொல்லித்தான் சில நேரங்களில் நமக்கு நினைவு வரும் போல. ஆனால் கூடவே இந்த சந்தேகமும் கிளம்பியது - காபி டேபிள் பூக்சை எழுதுவதை விட இனிப்பு  செய்து கொடுத்தால் இன்னும் அவர்கள் நினைவில் நிக்குமோ என்னவோ?

Thursday, October 27, 2011

Lasting Impressions: True Friend

Lasting Impressions: True Friend: The King's Mistress by Emma Campion is slow moving, going round in circles though with an interesting historical plot. In one place, the h...

Monday, October 24, 2011

Vattam

பள்ளிக்கூடம், வீடு. இதுதான் அவள் உலகம். அவள் வயதினர் எல்லாரும் மால், சினிமா என்று செல்வார்கள். இவளையும் ஓரிரண்டுமுறை அழைத்திருக்கிறார்கள். ஆனால், இவள் தயங்குவாள். 

அவர்களைப்போல் இவளிடம் அழகிய ஆடைகள் இல்லை. மொபைல் கூட இவளுக்கு தேவை என்றுதான் பெற்றோர்கள் வாங்கியிருந்தார்கள். காசுக்கு குறைவு என்று சொல்ல முடியாது. மற்றவர்களைப்போலதான். ஆனால் இவளுடை பெற்றோர்கள் எளிமையாக வாழவிரும்புவர்கள். இந்த காலத்திற்கு அது ஒத்துவராத விஷயம். அதனால் அவர்கள் மகள் பாதிக்கபடுகிறாள் என்று கூட அறியாமல் இருந்தனர். அவர்களை பொறுத்தவரை, இது படிக்க வேண்டிய வயது. இவள் அடம் பிடித்திருந்தால், அவர்கள் கேட்டுர்பார்களோ என்னவோ. ஆனால் இவளும் விட்டுவிடுவாள்.

அதனால் இவள் இரண்டு உலகங்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கிறாள். பெற்றோர்களுக்கு இவள் வேதனை புரியவில்லை. இவள் வகுப்பில் இவளை எல்லோரும் ஒதுக்கவில்லை என்றாலும் அவர்களுடன் கலந்துகொள்ள இவளுக்கு தயக்கமாகவே இருந்தது. அவர்களுக்கும் இவள் வித்தியாசமாக தென்பட்டாள்.

படிப்பு ஒன்றுதான் இவளுக்கு ஆறுதல். பரிட்சையின் பொழுது இவளை சுற்றி பல பெண்கள் இருப்பார்கள், சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள. ஆனால் முடிந்த அன்றைக்கு அவர்களெல்லோரும் படத்துக்கு போடும் ப்ளானில் இவள் சேர மாட்டாள். "போயேண்டா கண்ணு?" என்று தாய் வற்புறுத்தினால், "இல்லைமா போர்" என்று பொய் சொல்லுவாள். தாய்க்கு ஒரு புறம் கவலையாக இருந்தாலும், இந்த காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா என்று வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கும். அவள் மற்றவர்களிடம் பெருமையாக சொல்லிக்கொள்வாள். அதை கேட்டு இவள் இன்னும் கூனி குறுகி போவாள். இவள் ஒரு வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து விட முயற்ச்சி செய்தாள். ஆனால் அந்த வட்டம் குறுகிக்கொண்டே போனது. ஒரு நாள் அது கழுத்தில் ஏறி மேலே இருக்கும் பானில் இருந்து தொங்க செய்தது.

தாய் பதறிப்போனாள். "என்ன குறை வைத்தேன் உனக்கு?"

குறை வெளியிலா, அவள் மனதிலா என்று இனிமேல் ஆராய்ந்து என்ன பயன்?

Friday, October 21, 2011

Mazhaikaala Megangal

வெளியில் எட்டிப்பார்க்கும் பொழுது அப்படியே பிரமிப்பில் உறைந்துபோனேன் நான். ஹெலிகாப்ட்டர் பூச்சிகள் அங்கே பெரிதாக வளர்ந்திருக்கும் மரத்தை மேகம்போல் சுற்றி வந்தன. சில நாட்களாகவே அங்கு பட்டாம்பூச்சிகளையும் கண்டு வருகிறேன். இன்று காலை, இரு கருங்குயில்கள் எதோ வாக்குவாதம் செய்வதுபோல் கத்திக்கொண்டிருந்தன. நடுவில் இன்னொரு குயில் - பெண்குயிலோ  - கூடவே எதோ தான் நினைப்பதையும் சொல்லிக்கொண்டிருந்தது.

சில நேரங்களில் அந்த கதிரவன் மேகங்களுடன் சேர்ந்து எவ்வளவு கோலங்களை வானத்தில் இடுகிறான். இப்படி ஒரு அழகை கண்டு கவிஞர்கள் ஏன் கவிதை எழுதமாட்டார்கள்! இந்த நேரத்தில் தோணும், இந்த டெட்லைன் ரொம்ப தேவையா நம் வாழ்க்கைக்கு! எல்லாத்தையும் விட்டு, வானத்தின் கீழே,  அந்த மேகங்களிலேயே மிதந்து செல்லலாமே, கற்பனை லோகங்களுக்கு!

Thursday, October 20, 2011

Lasting Impressions: Finding Heroes

Lasting Impressions: Finding Heroes: All around me, I sense failing is the flavour of the season. - Or maybe, it has always been, but I am suddenly hearing about this a lot. Abo...

Wednesday, October 19, 2011

Cheenargalum Tharamum

சமீபத்தில் ஒரு புத்தகம் திருத்திக்கொண்டிருந்தேன். ஜப்பானில் தயாரிக்கப்படும் போருட்கள் என்றாலே ஒரு காலத்தில் தரம் இல்லை என்று பொருள். இன்று நமக்கு தெரியும், ஜப்பானின் கதை. தொழிலில் வழிகாட்டியாகி இருக்கிறார்கள்.

இரண்டு நாள் முன்னே ஒரு மெயில் வந்தது. சீனாவில் கட்டப்பட்ட ஒரு கட்டிடம் அப்படியே சாய்ந்துவிட்ட ஒரு படம் அது. நம் நாட்டுலே சீனப்பொருள்கள் வந்த புதிதில் மலிவு விலை என்பதால் ஆர்வத்தை உண்டாக்கினர். ஆனால் அவை தரம் குறைந்தது மட்டும் இல்லாமல் அபாயகரமா என்ற அச்சத்தையும் உண்டாக்கின. இந்த படத்தைப்பார்க்கும் பொழுது, நல்ல வேளை சென்னையை சுற்றி இன்னும் வீடு கட்ட இடமிருக்கிறது என்ற நிம்மதி உண்டாகியது.

ஆனால் அது கூடவே ஜப்பானைப்போல அவர்களும் தரத்தில் உயர்ந்து வருவதற்கு தடை ஏதும் இல்லை என்று தோணியது. நாம் நடுவாந்தரமாக  இருந்து விடுவோமோ என்ற கவலையும் உண்டாகிறது. ஊழல் பிடித்த இந்த நாட்டை திருத்தவில்லை என்றால் நம் நாடே சாய்வதற்கு நேரம் எடுக்கதல்லவா?

Monday, October 17, 2011

Lasting Impressions: Bubbling Heart

Lasting Impressions: Bubbling Heart: You are too busy to talk So am I! You have your road to walk So do I! We met, and I thought Our hearts met too But unspoken though my...

Saturday, October 15, 2011

Setril Kaal, Vaanatthil Kann

வெய்யிலில் நின்று, குனிந்து வயலில் வேலை செய்யும் தன் தந்தையை பார்க்கும் சரவணனுக்கு மனதில் எதோ ஒரு ஏக்கம். குளிர்ந்த காரில் முதலாளி வந்து, வெள்ளை வேட்டியில் அழுக்கு படாமல் நிலங்களை பார்த்து விட்டு, அங்கு வேலை செய்பவர்களுக்கு பத்து ரூபா ரொம்ப தாராளமாக கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு சென்றவரை அவனும் கவனித்துக்கொண்டிருந்தான். அவர் மகள் கலா வண்டியில்தான் உட்கார்ந்திருந்தாள் . காரின் எசியை பெரிதாக்கி, பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தாள். இவனை விட ஓரிரண்டு வயதுதான் அதிகமாக இருக்கும். பட்டிணத்தில்  படிக்கிறாள் என்று கேள்விப்பட்டிருந்தான்.

இவன் பக்கம் முதலாளியின் கண் திரும்பியது. "என்னடா? என்ன செய்யற?"

"படிக்கறேன்...அய்யா." அந்த கடைசி வார்த்தை அவனையும் மிஞ்சி ஒரு பழக்கத்தில்தான் வந்தது.

"படிச்சி என்ன கிழிக்கப்போற? வயல்லத்தானே வேல செய்யணம். உன் அய்யாக்கு உதவலாமில்ல?"

இவன் தலை குனிந்து பதில் பேசவில்லை.

அய்யாவும் வண்டியில் ஏறிச்சென்று விட்டார். அப்பொழுது கலா அந்த ரேடியோவுடன் இசைந்துப் பாடிக்கொண்டிருந்தாள். அவனுக்கும் இதையெல்லாம் அடையவேண்டும், அவன் தந்தை தாய் தங்கை இந்த சுகங்களை அடைய வேண்டும் என்றுதான் ஆசை... 

தானும் தந்தையை போல சேற்றில்தான் வாழ வேண்டுமா? இல்லை, அவன் இந்த வயலில் வேலை செய்யமாட்டான் என்று தீர்மானித்துக்கொண்டான்.

அவனைப்போல பல இளைஞர்களும் அவன் வகுத்த பாதையை கடைப்பற்றி இன்ஜினியரிங் படித்தனர்... அவர்கள் வாழ்க்கையும் மேன்பட்டன. ஆனால் என்ன, நம் நாட்டில் யாரும் பயிரிடத்தான் ஆளே இல்லை.

Tuesday, October 11, 2011

Padippathilirunthu Adutthakkattam

கதை புத்தகம் படித்தே வாழ்க்கையை ஓட்டுவதற்கு தயாராக இருந்த நான், இன்று நான் எழுதிய ஒரு கதை புத்தகம் வெளியிட்டு ப்ளிப்கர்ட் என்னும் சைடில் விற்பனையும் ஆகிறது என்று தெரிந்ததும் இருக்கும் குதூஹலம்! - 


இது ஒரு காதல் கதை... ஆனால் இதை எழுதினதே ஒரு பெரிய கதை! இந்த பாதை புதியது, அனுபவம் மிகவும் அற்புதமானது. தன் பிள்ளையை கையில் ஏந்துவது எவ்வளவு சுகமோ, அத்தனை ஆனந்தம், அத்தனை சுகம் இதிலும் உள்ளது!

நம் பேரை அட்டையில் பார்ப்பது எவ்வளவு திருப்தியாக இருக்கிறதோ, அவ்வளவே திருப்தி இதை படிப்பவர்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்!

உங்கள் நல் வாழ்த்துக்களை கோரி இன்றைக்கு விடை பெறுகிறேன்.

Lasting Impressions: A Game of Elastic

Lasting Impressions: A Game of Elastic: Suddenly, I remembered this game I used to play as a kid. I realised that I had played this when under 13, in Delhi, but never in Calcutta. ...

Lasting Impressions: A Game of Elastic

Lasting Impressions: A Game of Elastic: Suddenly, I remembered this game I used to play as a kid. I realised that I had played this when under 13, in Delhi, but never in Calcutta. ...

Monday, October 10, 2011

Nyabagangal

சிறிய துளிகள்
பொட்டுப்போல் மேலே
சொட்டுச்சொட்டாய்
விழுந்து எழுப்ப
சிறிய சிறிய நினைவுகள்

அந்த அரக்கு நிற பேனா
தோட்டத்தில் காய்க்கும்
கொய்யா, மாதுளை
பட்டுப்போன ரோஜா செடி
மண்புழு, அதை மூடிய கல் தரை

அண்ணாவுடன் மோதல்
அம்மாவிடம் சண்டை
அப்பாவிடம் ஒரு துளி பயம்
இடியிநோசை கேட்டு
சுருண்டு படுத்தல்

தெருக்களில் திரிந்து
வீட்டை மறந்து
நண்பர்களுடன் விளையாடி
பேசி, நடந்து
மெதுவாக வீடு திரும்பி

பள்ளியில் கழித்து
பேருந்தில் கதை பரிமாரித்து
தூங்கி வழிந்து
பிடித்துக்கொள்ளாமல்
நின்று, பாடி, விளையாடி

கரும்புத்துண்டுகளை
தனியாக ரசித்து
டிவி முன் வாயை பிளந்து
பட்டாசு வெடித்து
வேடிக்கை பார்த்து

ஒரு சின்ன சொல்
ஒரு பறக்கும் கார்
பெண்ணின் குரல்
மகனின் சிரிப்பு
போக்கில் விழுந்த வார்த்தை

எது எதை தீண்டும்
எதை நினைவூட்டும்
எந்த ஞாபகத்தில்
மிதக்க வைக்கும்
அது அறியாததே ஒரு ருசி

அன்று துன்பம்
இன்று அதே நினைவு
ஒரு இன்பம்
அதை பிடித்துக்கொண்டு
பறக்கும் நான் 

இன்றிலிருந்து விடுத்து
நேற்றில் மிதந்து
லேசான நெஞ்சில்
நினைவுகளை பொருத்து
பறக்க வைக்கும் ஞாபகங்கள்.






Thursday, October 6, 2011

Lasting Impressions: Growing Up : Part III

Lasting Impressions: Growing Up : Part III: When I reach out the top shelf to take out the box with Bournvita packet in it; when I call up the grocers to place my order for the month;...

Engum Iruppaan

நம் நாட்டில் பல விஷயங்கள் வருந்தத்தக்கவைதான். எனிலும் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும் விஷயம் நாம் எதிலும் கடவுளைக்காண்பதுதான். மரம், செடி கோடி, மிருகம், யாதாயினும் அதை ஓர் கடவுளின் வாஹனாமாகவோ அல்லது கடவுளின் ஒரு வடிவமாகவோ நினைத்து அதற்க்கென்றொரு நாள் குறித்து அதை வழிபடுவது ஒரு விதத்தில் எல்லா உயிரினங்களிலும் அந்த கடவுள்  இருக்கிறான் என்பத நமக்கு உணர்த்துகின்றன. ஒரு மரத்தை வெட்டினால் அதனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அதை ஈடு செய்யும்படி பத்து மரங்களை நடுவார்களாம்! இது நம்மூரில் மட்டும் இல்லை, பர்மாவில் கூட இந்த பழக்கம் இருந்ததாக ஒரு புத்தகத்தில் படித்தேன்.

ஏன் உயிர் ஜீவன்கள் மட்டும் இல்லாமல் நமக்கு உதவும் ஆயுதங்களுக்கு கூட மதிப்பு கொடுக்கும் ஒரு பண்டிகை! எந்த வேலையாக இருந்தாலும் அதை செய்வதற்கு உதவும் எதுவானாலும் அதற்கு இந்த நாளில் கும்புடு போட்டு அதை கடவுளாக தொழுகிறோம். வாயில்லை, பேச்சுமூச்சுக்கிடையாதென்றாலும் அதில்லாமல் நமக்கு ஏது வரும்படி? அதை நினைவில் வைத்து, அதிலும் கடவுளை காணும் மனப்பான்மை இருக்கும் நாட்டில் பிறந்திருக்கிறோம் என்பது பெருமையாகத்தான் இருக்கிறது!

ஆனால் என்ன, இந்த காலத்து மாடர்ன்/சயண்டிபிக் சிந்தனைகள் நம்மை சிந்திக்கவும் வைக்கின்றன, ரொம்பவே சிந்திக்க வைத்து சில சின்ன சின்ன, அழகான விஷயங்களை கொச்சைப்படுத்துவது மற்றும் இல்லாமல் அதை தூக்கி எரிய வைக்கின்றன. ஆனால், அதனால் கஷ்டப்படுவதும் நாம்தான்! மாட்டில் கடவுள் இருக்கிறானா என்று கேட்பது தவறில்லை. ஆனால் அதையும் ஒரு கருவியாக உபயோகிப்பதுதான் தவறு. இடம் வேண்டும், அதனால் காட்டை அழித்து, உணவைத் தேடி வரும் மிருகங்களை அழித்து, இதில் என்ன பாவம் என்று வாதாடுவதுதான் தவறு.

இந்த சிந்தனை மாறி மறுபடியும் எல்லா ஜீவன் கருவிகள் எல்லாவற்றிற்கும் கொடுக்க வேண்டிய மரியாதை தந்தால் தான் நாமும் வளமுடன் வாழ முடியும். 

Friday, September 30, 2011

Mithappil oru sthiram


நூறு கனவுகள் கண்டாலே, ஆறு கனவுகள் பலிக்காதா - ஒரு தமிழ் பாட்டுல வரும்.

இந்த நிமிஷம் வாழ்க்கையே கனவுல மிதப்பது போல இருக்கு.

ஒரு பக்கம் ஜலதோசத்துக்கு எடுத்துண்ட மருந்துகள் எங்கையோ மெதக்கரா மாதிரி இருக்கு! இன்னொரு பக்கம் நான் எழுதின ஒரு புஸ்தகம் பிரசுரம் ஆயிருக்குன்னு நினைக்கரச்சே ஒரே சந்தோசத்துல மிதக்கரா மாதிரி இருக்கு.

சும்மா பூமில கடன்னு சொல்ற மாதிரி ஒரு இடுப்பு வலி எல்லா மெதப்புக்கும் முற்றுக்கட்டை போட்டிருச்சு!

இதுதான் வாழ்க்கைப்போல இருக்கு. இறக்கையும் கொடுத்து கால்ல கல்லையும் கட்டி நல்லது கெட்டதுக்கு நடுல விழாம நடக்கறதுதான் திறமை, புத்திசாலித்தனமும் கூட!

Wednesday, September 28, 2011

Lasting Impressions: Dream Come True

Lasting Impressions: Dream Come True: Prabhat was excited about his promotion. He had worked hard for it, he had worked hard for the job in fact. And now he was a senior manager....

Saturday, September 24, 2011

திறமைக்கு ஒரு சவால்

நேற்று ஒன்று கேள்விப்பட்டேன். எனக்கு தெரிந்தவரின் மகன் கூடைபந்து கால்பந்து விளையாட்டுகளில் மிக ருசி வைப்பவன். சிறு வயதிலிருந்தே இந்த பந்தயங்களில் பங்கு பெற்றவன். கல்லூரியில் படிக்கிறான் இப்பொழுது. அவர் தந்தை அவனுக்காக மாநில அளவில் குழுவில் சேர்வதற்கு தேர்வில் பங்கும் ஏற்று நாலறைலக்ஷமும் கொடுத்திருக்கிறார். இல்லையென்றால் தேர்வில் பங்கேற்காமலேயே சிலர் தேர்ந்தெடுக்கப் படுவார்களாம்!

என்னுடைய வியப்பை தெரிவித்து எப்படி எல்லா இடங்களிலும் ஊழல் பரவி இருக்கிறது என்று சொல்லும் பொழுது அவர் சொன்னார் - அவருக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில், பெண் மருத்துவப்பட்டிப்பிர்க்கு நாற்பது லக்ஷம்  கட்டியிருக்கார்களாம்! 

அப்படியாவது அந்த படிப்பு வேண்டுமா என்றாகி விட்டது. இப்படி பணத்தைக்கட்டி வரும் மருத்துவர்களை நம்பலாமா? இவர்களும் தான் கட்டிய முதலை வசூல் செய்வதில் தானே குறியாக இருப்பார்கள்? அதுவும் சொன்னார், இந்த உறவினர். ஒரு மருத்துவர் அவர் இடம் வருத்தப்பட்டுக்கொண்டாராம் - அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு வேண்டுமென்றால் அவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனரிலிருந்து எல்லாருக்கும் பணம் தரவேண்டுமாம்!

இதற்கு யாரை பழிப்பது? நாமே நம் தலையில் மண்ணை வாரிக்கொள்கிறோம் - கொல்கிறோம், நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ. வாழ்க்கை தரம் தேறி விட்டதென்பது ஒரு சிலருக்குத்தான். மற்றவர்களுக்கும் அந்த நிலை அடையவேண்டும் என்ற ஆர்வத்தில் எப்படி வேண்டுமானாலும் அந்த பணத்தை சம்பாதித்துவிடவேண்டும் என்ற நோக்கம் அதிகரிக்கும் இந்த நாளில் வேற எதை எதிர்பார்க்க முடியும்? நாள்ல நிலையில் இருப்பவர்களுக்கோ எவ்வளவு இருந்தாலும் போராதுப்போல! 

ஊழல் ஒழிய நாம் என்ன செய்கிறோம்? என்ன செய்ய முடியும்? எப்படியாவது நினைத்ததை அடைய வேண்டும் என்ற வெறி நம் வேலையில் தெரிய வேண்டும் என்பது ஒரு காலம். இன்று திறமை பேசவில்லை, பணம் தான் பேசுகிறது.


Lasting Impressions: The Fruit of 25 Years

Lasting Impressions: The Fruit of 25 Years: I graduated from comics to books very late. I probably hadn't started reading Enid Blytons till I was in the fifth. And then I had two class...

Friday, September 23, 2011

முன்னிருப்பதில் ஆர்வம்

யார் சொன்னார்கள், இந்தியர்களுக்கு போட்டிநோக்கம் போதாதென்று! நமக்கு போட்டியிட வாய்ப்புகள் அவ்வளவு இல்லை. ஏனென்றால் போட்டிகள் வைப்பவர்களுக்கு பொறாமை நம்முடைய திறமையை பார்த்து. அதனால் தான் இந்திய ரோட்களில் வண்டியை ஓட்டுவது ஒரு போட்டியாக வைக்கவில்லை.

ஆரம்பகாலத்தில் இருந்தே நாம் இதற்குத்தான் பழகுகிறோம் - ரோட்டில் முந்திக்கொண்டு போவதற்கு.

பைக் - கிடைக்கும் காப்புகளில் புகுந்து, வேகமாக ஓடும் கார்களை தடுக்கிவிடுமாறு முன்னே வந்து அவர்களை பின்னாடி தள்ளுவதில் ஒரு சுகம் இருக்கே - ஆஹா!

கார் - எவனாவது முன்னாடி வந்தா, மவனே, ஹோர்ன் அடித்தே தூக்கி விடலாம். நமக்கு அந்த சாமர்த்தியம் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறான் டிரைவர். வலதுபுறம் இடதுபுறம் என்று பாராமல் ஒரு சுமொவைக்கூட பைக் மாதிரி ஓட்டப்பழகியவன் அவன்.

ஆட்டோ - இது எந்த கட்சி என்று சொல்லவே முடியாது. நட்ட நாடு ரோட்டில் ஒட்டுவான். எந்த பக்கத்திலிருந்தும் முந்த முடியாது. ஆட்டோ ஸ்பீட் அதிகம் இல்லாதக்குறையை இப்படி நிறைவேற்றிக்கொள்ளும் - கொல்லும். என்னால் முடிய வில்லை என்றால் நீயும் முந்தக்கூடாது.

பஸ்/ட்ரக் - இரண்டும் வேறு வேறு தான், ஆனால் மனப்பான்மை ஒன்றே. நமக்கு அவசரம் என்ற பொழுது நமக்கு முன்னாள் சாவகாசியமாக ஓடும். நாம் அதற்க்கு முன்னாள் வந்தால் பயம் ஏற்படராப்போல் நம்மை வேகமாக போகச்செய்யும். இவர்களே நம் சாலைகளின் மன்னர்கள். அவர்களுக்கு எந்த விதமான விதிகளைப்பற்றியும் கவலையில்லை.

சைக்கிள் - பாவம் என்றும் சொல்லலாம், பாவி என்றும் சொல்லலாம். மொத்தத்தில் இவர்கள் உபத்ரவம் கொஞ்சநஞ்சம் இல்லை.
எல்லாம் எதற்கு? அந்த சிக்னல் மாறுமுன் போய் சேரத்தான். சிவப்பு விழுந்துவிட்டால், பச்சை வருவதற்கு முன் அவர்களால்தான் பறக்க முடியும். அவர்களுக்குத்தான் அவசரம், அவர்களால்தான் சாமர்த்தியமாக ஓட்ட முடியும்.

நாம் பொருள் செய்வதில் முதலாக இல்லாமல் இருக்கலாம், தரத்தில் ஏனோ தானோ என்று இருக்கலாம். எங்கேயும் சொன்ன நேரத்தில் போய் சேராமல் இருப்பது ஒரு பெருமைக்குரிய வஷயம். ஆனால், ரோட்டில் போகும் அவசரத்தைப்பார்தாலோ, எங்கேயோ தலை போற காரியம் என்றுத்தோனச்செய்யும்.

இப்படிப்பட்டத்திரமையை காட்டிக்கொள்ள உலகளவில் நமக்கு ஒரு வாய்ப்பு இல்லாதது...மிகவும் வருந்தத்தக்கது.

Thursday, September 22, 2011

Lasting Impressions: Elves

Lasting Impressions: Elves: When I see the trees Lush, rich and green Looking washed and clean After rains heavy I feel like becoming small Climbing the trees tal...

Tuesday, September 20, 2011

இதில் நான் யார் - Which is me?

பழுத்த பழம் ஒன்று மரத்தில் கண்டேன்.
கை துருதுருத்தது அதைப்பரிக்க
நில் என்று ஒரு குரல் தடுத்தது
யார் என்று திரும்பிப்பார்த்தேன்.
நான்தான் என்றது அது என்னுள்ளிலிருந்து.
அட நீ வேற! தவறான சமயத்திலே வந்து
என்றது மற்ற்றொரு குரல், என்னுள்தான்!
ஒன்று வென்று மற்றொன்று அடங்கியது

தராசைப்போல என்னை ஆட்டிவைக்கும்
இப்படியும் அப்படியும் மாறச்செய்யும்
எது வெல்லும் என்று சொல்லமுடியாத 
நல்லது கெட்டதென்று பிரிக்கமுடியாத 
சில நேரங்களில் ஒன்று இல்லை
பல குரல்கள் என்னுள் கேட்கும்.
அந்த நிமிடம் எதற்கு பலம் அதிகமோ
அதுவே ஓங்கி நிற்கும்

ஆனால் அதற்க்கு பலம் கொடுப்பது யார்?
எல்லா குரலுமே என்னுடையதுதானே!
இதை செய், அதை விடு, வேறொன்றும் இருக்கிறதே
என்று சுட்டிக்காட்ட பல குரல்கள்
இதில் நான் யார்? எதை என்னுடையதென்பது?
எந்தப்பக்கம் சாய்வேன் என்று நானே அறியாமல்
நிற்கும் பொழுது தோன்றும், இதில் நான் யார்?




Thursday, September 15, 2011

Kaathal - Love

உன் அழகிய கண்ணிலா?
கூர் நாசி அழகிலா?
புன்னகை தவழும் இதழிலா?
இந்த மயக்கும் மனதிலா?

அழகு மட்டும் போதுமோ?
காதல் என்றும் நீடுமோ?
வயது ஏறி கூடுமோ?
கூடு கலைந்து போகுமோ?

முகத்தில் இருந்து
அகத்தைக்கண்டு
வெளியிலிருந்து
உள்ளே புகுந்து

மங்கும் பார்வை
குறையும் வலிமை 
சுருங்கும் தோல்
குனிந்த தோள்

கண்டும் காணாமல்
தெரிவதெல்லாம்
சுகமும் துக்கமும்
பகிர்ந்ததென்று

வயது கூடி இருந்தும் கூட
கூடியிருக்க வலியுறுத்தும்
நம் இருவருள் வளர்ந்து
இடையில் நிற்கும் முதிர்ந்த காதல்

Wednesday, September 14, 2011

Lasting Impressions: Golden Shower

Lasting Impressions: Golden Shower: The shower Golden and bright Making me feel Blessed and bright Sometimes hidden By darkness of mind When blessings seem Banes in gui...

Tuesday, September 13, 2011

Payanam - The Journey

கும் இருட்டு
கருவில் இருப்பது போல்
அதே சுகம்
எதுவும் நம்மை தீண்டாது
என்ற நம்பிக்கை

அந்தரங்கத்தில் மிதப்பது
உடலே இல்லாதது போல்
பஞ்சைப்போல் லேசாக
இப்படி மிதப்பது
சாத்தியமா!

அட, உடலே இல்லை!
பரந்த வெளியில் 
பறவைப் போல் பறப்பது
நானா, அல்ல
ஒரு இனிய கனவா?

இல்லையே! 
அதோ கீழே!

சடலம் ஒன்று, அதைச்சுற்றி
அழுபவர் யார்?
தெரிந்தவர்களா?

உடலை விட்டு
பிரிந்த உயிர்! இந்த உலகை
ஒருமுறை சுற்றி
தன் இருப்பிடத்தை தேடி
கலக்கும் ஆவல்!

தெரிந்தவர், தெரியாதவர்
யாராயினிலும்
தேவை இல்லை இனி
அந்த ஜோதி
அதோ! அழைக்கிறது!

வந்தேன், கலந்தேன்
நான் நானாக இல்லை
ஒரு மின்னல்
ஒரே வெளிச்சம்
ஐய்க்க்யமாகிய நாம்! 

Monday, September 12, 2011

Lasting Impressions: We Are Our Parents

Lasting Impressions: We Are Our Parents: I stand in the kitchen, shouting at my son. "You know the veggies make you grow tall and strong. How can you make me say it to you everyday!...

Sunday, September 11, 2011

Jokesum Feedbackum

ஒரு புத்தகம் படித்தேன் - பீட்பாக் (feedback) பற்றி. எப்படி ஒருத்தரைப்பற்றி கருத்துக்கொடுக்க வேண்டும், அதை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று. அதில் ஒரு ஆராய்ச்சியைப்பற்றியும் படித்தேன் - ஆண்களும் பெண்களும் கருத்துக்கொடுப்பதிலும் வாங்குவதிலும் எப்படி வேறுபடுகிறார்கள் என்று.

அந்த ஆராய்ச்சியின் படி, ஆண்கள் தோல்வியுற்றால் வேறு காரணங்களை அதற்க்கு பொறுப்பாக்கிறார்கள். பெண்களோ, தன்னையே அந்த தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறார்கள்.

இப்பொழுதுதான் புரிகிறது, ஏன் எல்லா கணவன் மனைவி ஜோக்குகளும் மனைவியையே பழிக்கின்றன என்று! அவைகள் எழுதப்பட்டது ஆண்களால் தானே!

Friday, September 9, 2011

Lasting Impressions: Paranormal

Lasting Impressions: Paranormal: Energy balls, ghost, spirits... they don't always feature in my conversations, but sometimes they are fascinating topics. There are people w...

Thursday, September 8, 2011

Nizhal

நேற்று ஒரு நடுத்தர வயதான தம்பதியரை சந்திக்கச்சென்றிருந்தேன். அவர்களுடன் பெசிக்கொண்டிருந்தப்போழுது சில பழைய நினைவுகளை அவர்கள் பகிர்ந்துக்கொண்டார்கள். அது அவர்களுக்கு சங்கடமான நினைவுகள் என்று புரிந்துக்கொண்டேன். ஆனால் அந்த விஷயத்தை அவர்களிடம் பேச வேண்டிய கட்டாயம். அதை அவர்கள் பேசி முடித்தபிறகு, மற்ற விஷயங்களை பேசும்பொழுது, அந்த அறையில் ஒரு மாற்றம்!

நாங்கள் பேசிக்கொண்டிருந்தது கணவனின் அண்ணன் பையனைப்பற்றி. அந்த பையன் இறந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. ஆனால் அவனுடைய பகைமை சுபாவத்தினால் குடும்பத்தில் பல பிரச்னைகள். இவர்கள் மனதில் அந்த ஆதங்கம் இன்னும் ஆழமாகவே இருந்தது. அதனாலையோ என்னவோ அவனைப்பற்றிப் பேசும் பொழுது அந்த அறையே இருண்டதுபோல இருந்தது. அதை நான் அப்பொழுது கவனிக்கவில்லை. இந்த விஷயத்தை முடித்து சுமுகமாக பேசிக்கொண்டிருந்தப்பொழுது ஒரு நிழல் நகர்ந்தது போல வெளிச்சம்!

இதுமாதிரி எனக்கு இதற்க்கு முன்னால் நடந்ததே இல்லை. ஆனால் யாரைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தோமோ, அவனைப்போல ஆளைப்பற்றியும் நான் கேள்விப்பட்டதில்லை. நம்மை சுற்றி ஆத்மாக்கள் இருக்கின்றன என்கிறார்களே! அவனுக்கு தெரிந்திருக்குமோ, அவனைப்பற்றித்தான் பேசுகிறார்கள் என்று?

Tuesday, September 6, 2011

Lasting Impressions: The Mind Filter

Lasting Impressions: The Mind Filter: It is strange, The mind, How it filters out the unpleasant. Remembering only all that is best. The past, when it was the present D...

Monday, September 5, 2011

Agatthin Azhagu

அவன் நடந்து வரும்பொழுதே ஒரு தனி கம்பீரம் தெரிந்தது. தன்னையும் அறியாமல் அவள் மனம் அவனிடம் ஈர்ந்தது. காட்டிக்கொள்ள கூடாதென்று அவள் தன் குரலை கடுமையாக்கிக்கொண்டு, "யார் வேண்டும் உங்களுக்கு?" என்று கேட்டாள்.

"நீங்கள்தான்," என்றான் அவன் மென்மையாக. 

முகம் சிவந்து, வெட்கத்தில் தலை குனிந்தாள். "என்ன!" என்று தயங்கினாள்.

"நீங்கள் தாமரை தானே? உங்களைத்தான் பார்க்க வந்தேன்," என்றதும் சட்டென நிமிர்ந்தாள்.

"ஓ! என்ன வேலை?" என்றாள், தன்னை சுதாரித்துக்கொண்டு.

அவன் வந்தவேலையைச்சொன்னான். அவள் விரைவாக அதை முடித்துக்கொடுத்தாள். அவன் பெயர் ஆதித்யா என்று அவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். அவள் வேலையை கவனித்தவாறே பேசிக்கொண்டிருந்தான். அவளை சிரிக்க வைத்தான். அவளுக்கு அவன்மேல் இருந்த ஈர்ப்பு அதிகரித்தது. அவன் கிளம்பும்பொழுது தன்னுடைய செல் நம்பரை கொடுத்தாள். ஒரு வாரத்தில் இருவரும் கல்யாண பேச்சிற்கே வந்து விட்டனர். அவளுடைய குடும்பம் அவனை பார்த்து அகமகிழ்ந்தனர். "இப்படி ஒரு பையனை நாங்களே தேடியிருந்தாலும் அமைந்திருக்காது," என்று பூரித்தனர்.

கல்யாணமான ஒரு மாதத்திலேயே அவளுக்கு புரிந்து விட்டது, தான் ஏமாந்து போனது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். இவனுடைய அழகு அவனுடைய அழகிய அகத்தை காட்டுகிறது என்றுஅவள் நினைத்தது தவறு. அவன் ஒரு மிருகம் என்று போகபோகதான் தெரிய வந்தது. ஆனால் அதை தன் வீட்டினரிடம் இருந்து அவள் மறைத்தாள். அவனிடம் பயம் ஒரு பக்கம், மற்றவர்கள் தன்னை நம்பமாட்டர்களோ என்ற தயக்கம் மறுபுறம். சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கை ஒரு புறம். ஆனால் அவளுடைய அழகிய முகம் வாட வாட, அவனுடைய வெறியும் அதிகரித்தது.

ஒரு நாள், அவன் அந்த பாட்டில் கொண்டு வந்த பொழுது, அவள் கவனிக்கவில்லை. அவன் ஏற்கனவே எதோ சதி நோக்கத்துடன் தான் வந்திருக்கிறான் என்று மற்றும் புரிந்தது. அது என்னவென்று அவள் முகம் எரியும் பொழுது யோசிக்க கூட முடியவில்லை. அவன் ஆசிட்டை அவள் முகத்தில் எறிந்தப்போழுது, "போய் ஒழி" என்று சொன்ன வார்த்தைகள் மட்டும் ரீங்காரமாக ஓலித்தது.

இப்படி வாழ்வதற்கு பதில் போய் ஒழிந்திருக்கலாம். அவள் நேரம், உயிர் பிழைத்தது. முகம் பொசுங்கியது.

இன்று அவன் மறுமணமாம். பார்க்க லக்ஷணமாக இருக்கிறான் என்றுப்பேசிக் கொள்வார்களோ? சிரிப்புதான் வருகிறது. முகம் அழகாக இருந்ததால் மனதில் இருக்கும் மிருகம் யார் கண்ணிலும் தெரியவில்லை. அவனுடைய அசிங்கமெல்லாம் என் முகத்தில் வீசிஎறிந்து விட்டு, இதை மிருகமுகமாக்கி அவன் தன் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொண்டுவிட்டான்! 

ஆனால் மற்றவர்கள் அவனால் பாதிக்கப்பட்ட என்னைப்பார்த்துத்தானே  பயன்தோடுகிரார்கள்!

Saturday, September 3, 2011

Lasting Impressions: Throwing Baby with the Bathwater

Lasting Impressions: Throwing Baby with the Bathwater: A year ago, when I was doing the book on Tiruvannamalai, I met weavers from Aarani, a place famous for silk. The chief weaver's wife proudly...

Thursday, September 1, 2011

சுயகௌரவம்

"என்னால் இன்னிக்கு உன்ன ஆபீஸ்ல விட முடியாது," ரவி சொன்னான்.

"ஏன்?" மாலதி கேட்டாள்.

"மீட்டிங் இருக்கிறது, நுங்கம்பாக்கத்தில்," என்றான். "உங்க அண்ணாவைப்  பிக் அப் பண்ணிக்கச்சொல்லு."

"அதைப் பற்றி  உங்களுக்கென்ன?" என்று நக்கலாகக் கேட்டாள். அடுத்து என்ன வரப்போகிறது என்று நன்றாகத் தெரியும் அவளுக்கு.

"ஏன்? கொஞ்சம் தங்கைக்காக சிரமப்படக்கூடாதோ?" வார்த்தைகளால் இடித்தான். 

"ஏன் நான் ஒரு நாள் ஆடோல போகக்கூடாதோ?" என்று பதிலளித்தாள்.

"இல்லை, கார் தான் வாங்கிகொடுக்கல..."

"என் புருஷன் நன்கு சம்பாதிக்கும் போது, அவன் எதுக்கு வாங்கித் தரணம்?" என்று அவளும் விடவில்லை.

"தங்கைக்குச் சௌகரியமாக இருக்கும்னு ஒரு அண்ணனுக்கு தோணாதா?" என்றான் அவன்.

"நீங்களும் உங்க தங்கையும் தான் இருக்கீங்களே, பாச மலர்கள்! அதே கஷ்டம் எங்கண்ணனுக்கு என்னால் வர நான் ஒரு நாளும் ஒப்புக்கொள்ள மாட்டேன்."

"நம்ப பாடுதான்பா பெரும்பாடு," என்று முணுமுணுத்தான். அவளும் ஒரு புன்முருவலோடு அங்கிருந்து நகர்ந்தாள்.

**

"வினயாக்கு கிப்ட்  வாங்கணும்," என்று ரவி சொல்லும்பொழுதே வயிற்றைக் கலக்கியது. போன வருடம் அவர்களுடைய பத்தாவது கல்யாண நாளிற்கு வினயா மறைமுகமாக கார் கேட்டிருந்தாள். "நீங்கள் இருவரும் சம்பாதிக்கறீங்க. எங்க மாமியார் வீட்ல எனக்கு எவ்வளவு கௌரவத்தைச் சேர்க்கும்," என்று அவள் பூரிக்கும் பொழுது, அவளுடைய தாயும், "என்னடி, ஒரே தங்கை... ரவி சும்மா விடுவானா! பார் நீ, அவன் நீ ஜம்முன்னு போய் வர கார் வாங்கறானா இல்லையான்னு பார்," என்று வேறு பெருமைப் பட்டாள்.

மாலதி தனக்கு கார் வாங்கலாம் என்ற எண்ணத்தை வேரோடு அழித்தாள்.

வாங்கிக் கொடுத்த கார் கடனும் தீர்ந்த பாடில்லை, வினயாவின்  குறையும் இன்னும் தளர வில்லை. "என்ன அண்ணா, மாருதி சுசுகியா! i10 வாங்கித் தருவேன்னு நெனச்சேன்," என்று அவள் சொல்லும்பொழுது என்ன இவள் இப்படி இருக்கிறாள் என்று ஆகி விட்டது மாலதிக்கு.

அது வரைக்கும்  அவளும் அண்ணனிடம் எதையாவது எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். பட்டுப் புடவை, நகை, குழந்தைகளுக்கு என்று.

ஆனால், வினயாவைப் பார்த்தபிறகு, அவளுக்கு தன் மேலேயே சீ என்றாகிவிட்டது. ரவியும் அவளும் நன்றாக சம்பாதித்தும் பிறந்த வீட்டிலிருந்து எதையாவது எதிர்பார்த்துக்கொண்டிருப்பது எவ்வளவு கேவலம் என்று புரிந்தது. தன்னால் முடிந்தால் சரி, இல்லையென்றால் எந்த பொருளுமே வேண்டாம், என்று அன்று தீர்மானித்ததுதான். ரவியும் அவன் தாயும் எவ்வளவு இடித்துப் பேசினாலும் சரி, அவள் சுயகௌரவத்தினால் தலை நிமிர்ந்தே நடந்தாள். 

எதிர்பாராததால் அண்ணன் சந்தோஷமாகத் தரும் நூறு ரூபாய் கூட உயர்ந்ததாகத் தோன்றியது.







Lasting Impressions: A Humane Cop Tale

Lasting Impressions: A Humane Cop Tale: I have been off thrillers for a while. They are nearly as fantastic as fantasy tales. The "never-make-a-mistake-except-to-take-story-forwar...

Tuesday, August 30, 2011

Vaakjaalam - The Word Trap

என் மகள் தமிழ் படித்து முடிப்பதற்குள் எனக்கே தமிழ் மறந்து போய் விடும் போல இருக்கிறது. எழுத்துக்கூட்டி படித்தாலும், அந்த வார்த்தைகளே என்ன என்று புரியாததால், மரண வேதனையாக இருக்கிறது. "போரும்மா" என்று அவள் கெஞ்சும்பொழுது, நிஜமாகவே போரும் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், ஒவ்வொரு வார்த்தையும் மெதுவாக படிப்பதால் அதற்க்கு அர்த்தமும் புரிந்து தொலைக்க மாட்டேன் என்கிறது. ஏன்தான் பேசும் பாஷையும், எழுதுவதிலும் இவ்வளவு வேறு பாடுகளோ! அவர்களோடு - அவாளோட; விற்பதற்கு - விக்கறதுக்கு....

ஆனால், ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ள சொல்கிறேன். இங்கிலிஷில் படிக்க ஆரம்பித்த பொழுதும் இதே திணறல் தான். அப்பொழுதெல்லாம் இங்க்லீஷ் கதைகளை தமிழில் சொல்ல சொல்வாள். இப்பொழுதெல்லாம், தமிழ் கதைகளை இங்கிலிஷில் சொல்ல சொல்கிறாள்! என்ன ஒரு மாற்றம்! இதுதான் இக்கறைக்கு அக்கறை பச்சை என்பதோ?

Lasting Impressions: Old and New Bonds

Lasting Impressions: Old and New Bonds: My belief is that after a particular age, as we become involved in our professional life, and establish a relationship with our spouse and h...

Sunday, August 28, 2011

Chakrvyooham - The Vicious Circle

பெண் வேலை செய்ய
வேண்டும் வேண்டாம், 
சட்டம் வைக்க நீ யார்?
கேட்க துடிக்கும் நா

திறமையை ஒளித்து
வீட்டில் அடைத்து
பூட்டி வைக்கவா
பிறந்தாள் அவள்?

தனக்கென ஒரு அழகிய
பாதையை வகுத்து
கூறிய பார்வையுடன்
முன்னேற துடிக்கும்

அவளை தடுக்க
நீ யார்
என்று கேட்க
எழும்பும் நா

சோர்ந்து, களைத்து
நாபுரமும் சுற்றி
அயர்ந்த கண்கள்
நாவை தடுத்து

பார் சற்று அங்கே
என்று காட்டும் காட்சி
ஒரே கணம்
மனதை துளைத்து 

ஐயோ பாவம்
என்று சொல்ல 
இவன் நிலை 
அதைவிட பரிதாபம்

என்ன சம்பளம்?
எங்கே வேலை?
என்ன பதவி?
என்ற கேள்வி

சுற்றி சுற்றி வர
அந்த ஆண் மகன்
தனக்கென்று வழி தேடி
செல்ல ஒரு வழி ஏது!

தனக்கு பிடிக்குமா 
என்று கேட்காமல்
ஊருக்கு வேணுமே
என்று ஓடி அலைந்து

"கார் ஸ்கூட்டர் பங்களா"
உழைத்து சேகரித்து
அணில் போல் குவித்து 
அவன் நிலை மட்டும் என்ன?

ஊருக்காக வாழ்ந்து
அதற்க்கு பயந்து சாகும்
அவனும் ஒரு விதத்தில்  
அடைக்க பட்டவன் 

பார்ப்பதற்கு ஆஹா
விடுதலை பெற்றான்
அவன் என்று 
குமறும் பொழுது

அவனுக்கு குமறல்
மனதில் புழுக்கம்
தனக்குள் சிக்க வைக்கும்  
அந்த சக்ரவ்யூஹம்.

Thursday, August 25, 2011

Lasting Impressions: The Celebrated Dancer - Short Story

Lasting Impressions: The Celebrated Dancer - Short Story: She sat through the program with great difficulty. The dancer had been written about in that morning's paper, which had worked its charm and...

Wednesday, August 24, 2011

Oru thaai pillai

ஒரு தாய்க்கு பிறந்த பிள்ளைகள்
ஒரே வீட்டில் வளர்ந்தவர்கள்
கூட சேர்ந்து விளையாடியவர்கள்
குத்துச்சண்டை போட்டவர்கள்

தாய் தந்தையிடம் மாட்டி வைத்து
அவர்களுக்கு தெரியாமல் காப்பாற்றியவர்கள்
எவனாவது வம்பு சண்டைக்கு வந்தால்
சேர்ந்து நின்று எதிர்த்தவர்கள்

வழிகாட்டியாக பெரியவனும்
உயிரை கொடுக்க சிறியவனும்
தாய்ப்போல் பார்த்துக்கொள்ளும் பெரியவளும்
பிள்ளைப்போல் அன்பை பொழியும் சிரியவளும்

வளர்ந்து ஆளாகி தத்தம் வழியில் 
மணமும் செய்து தன் வாழ்க்கை அமைத்து
தன குடும்பம் பெருக பழசை துறந்து
புது வாழ்வில் ஒன்றி தன்னை மறந்து

நீ யார் கேக்க, என்று பகைமை கொண்டு
உயிர்கொடுப்பவன் உயிரை எடுத்து
போடி நீதான் எப்பவும் செல்லம்
தாயாகிருன்தவள் குறையை கண்டு

ஒரு குடும்பமாக இருந்தவர்கள்
வீட்டை பிளைக்க காரணம் கண்டு
நீயும் நானும் வேறு வேறு
என்று தத்தம் வழியை கண்டு கொண்டு

தாயை வதைத்து, அது கண்ணை மறைத்து
தாயே எதிரியாகு நிற்கும் பொழுது
ரத்த கண்ணீர் வழிவதை கண்டு
துடைப்பது யார், நீயா நானா?

Lasting Impressions: It is Everywhere - Short Story

Lasting Impressions: It is Everywhere - Short Story: She was fed up of the fever. It had gone undiagnosed for more than a week, but tapered off after she swallowed some antibiotics.When it recu...

Monday, August 22, 2011

Lasting Impressions: It Begins Early - Short Story

Lasting Impressions: It Begins Early - Short Story: "Finally I got admission for my child in the school I was trying!" Father said proudly to friend. "Oh really! How wonderful! LKG, right?" ...

Sunday, August 21, 2011

Lasting Impressions: Are We Really Against Corruption?

Lasting Impressions: Are We Really Against Corruption?: Am I a cynic? I don't know. I should join in the applause to the way the average Indian Middle Class has risen up to the occasion and joined...

Saturday, August 20, 2011

Kurangilirundu pirantha manithan

மரம் தாவி .
நொடிக்கு ஒரு
வித்தை காட்டி
ஒரு நிமிடம் நேரே
மறு நிமிடம்
தலை கீழே சாய்த்து

இது குரங்கா, மனமா?
குரங்குபோல் மனமா?
ஒரு சிந்தனையில் இருந்து
மற்றொன்றிற்கு தாவி
பிடித்தவர்களிடம் குறை கண்டு 
வேண்டாவதரிடம் தொற்றிக்கொண்டு  

ஒரு நொடி 
ஒன்றை சொல்லும்
அடுத்த நொடி
அதை பொய்யாக்கும்
மாருவதுகூட தெரியாமல்
நிஜம் என்று பொய்யை சாதிக்கும்

இந்த குரங்கை நம்பி
வாழ்க்கையை ஓட்டும் 
மடங்கள் நாம்
வாக்களித்து 
காப்பாற்ற தெரியாத
ஜடங்கள் நாம்

சரி எது தவறெது
என்று அறியாமல் 
வாக்ஜாலங்களில் சிக்கி
மிரண்டு போராடி
மற்றவர்களை பழித்து
பிழைக்க முயலும் கோழை நாம்.

Monday, August 15, 2011

Lasting Impressions: All for Big Bucks

Lasting Impressions: All for Big Bucks: "I am not a political writer, or too savvy about developments in the political world. My newspaper reading is cursory at best, and many a tim..."

Porulaathaaram irunthum manathil ethu thaaraalam? - High on cash, low on humanity


நான் நமது நாட்டு தலைவரின் சுதந்திர தின பேச்சை நான் கேட்கவில்லை. ஆனால் ஹிந்துப்பத்திரிகையில் தலைப்பு படித்தேன். லஞ்சத்திற்கு எதிரான போராட்டத்தை சிறிது நிதானத்துடன் நடத்துவதற்கு வேண்டுகோள் போல தோன்றியது.

அதாவது, லஞ்சம் வேகமாக வாங்கலாம், நாடு துரிதமாக சீர்  கெடலாம். ஆனால் அதை எதிர்த்து போராட்டம் மட்டும் நிதானமாக இருக்க வேண்டும். ஏன், இன்னும் இவருக்கு வர வேண்டியது வந்து சேரவில்லையா? இல்லை இப்படி சொல்லுமாறு அவர் மீது எதாவது  வற்புறுத்தலா?

அதுவும் தான் இருக்கட்டும். இந்த அண்ணா ஹஜாரே அவர்கள் மீதும் தான் என்ன ஒரு நெஞ்சழுத்தத்துடன் நமது நாட்டு அரசு பழி சுமத்துகிறது? அதை எதிர்த்துப்பேசுபவர்கள் மீது ஏதோ நிறைய புகார்கள் ரெடியாக வைத்திருப்பாற்போல்!

இப்படி எங்குத்தான் எல்லாத்தையும் பரித்துச் செல்லப்போகிரார்களோ தெரியவில்லை. சில நாடுகளில் இப்படியெல்லாம் சேர்த்தால்தான் வாழ முடியும். நம் நாட்டில் இருக்கும் சுதந்திரத்திற்கு இது தேவையே இல்லையே? சிறிது இருந்தாலும் நன்றாகவே வாழலாமே? கொண்டு போய் வெளி நாட்டு வங்கிகளில் பூட்டி வைத்து என்ன சுகத்தை காண போகிறார்கள்?

வங்கியில் எவ்வளவு இருந்தாலும், மனதில் தாராளம் இல்லையே? குறுகிய மனிதர்களின் பொருளாதாரம் அவர்களுக்கு எப்பொழுதுமே நிம்மதியை கொடுக்காது.


Thursday, August 11, 2011

Poo Malarattume - Let it Blossom

ஒரு போர்வைக்குள்
மூடப்பட்ட அந்த பூ
காற்றுக்கும், வெளிச்சத்திற்கும்
மன்றாடிய அந்த பூ

ஒரு அன்புப்பார்வைக்கு
ஏங்கிய அந்த பூ
தன் மணம் பரவ
அல்லாடிய அந்த பூ

ஆதரவைத்தேடி இருட்டில்
நடுங்கிய அந்த பூ
அந்த பூ சிதருவதர்க்குள்
ஒரு முறை, ஒரே ஒரு முறை

அது தேடும் வெளிச்சத்தை
அது மேல் படர அந்த
போர்வையை கிழிக்க
மாட்டாயா, என் அன்பே?

அது பூத்து,
மணம் பரவ
அழகு மலர
ரசித்து சிரிக்க

உன் மனமிரங்கி,
அன்பு கசியும்
ஒரே ஒரு பார்வை
போதுமே, என் அன்பே

அந்த வானமே
அந்த பூவை நோக்கி
நீரும் வெயிலும் 
பொழிந்தாற்போல்

மகிழ்ந்து, மலர்ந்து
பரவசமடைந்து
உல்லாசமாக 
விரியும் அந்த பூ




Wednesday, August 10, 2011

Lasting Impressions: The Inner Space

Lasting Impressions: The Inner Space: "I stretch my hand To reach out to you But away you step Leaving me to rue I look up and smile See you look away A knife twists in my ..."

Monday, August 8, 2011

Vithiyin Vilaiyattu - The Conspiring Destiny

அது எப்படி? சில நேரங்களில், சில கேள்விகள் நம் மனதை பாதிக்கும் பொழுது, நம்பளையும் அறியாமல் நமக்கு பதில் கொடுப்பவர்கள் நம் எதிரே எதேச்சியாக தோன்றுகிறார்கள்? நாம் கேள்வி கேக்காமலேயே நமக்கு மனதில் தெளிவு ஏற்படும்படி ஒரு விஷயத்தை கூறுகிறார்கள்?

விதி நம்மை அந்த நிலைக்கு அழைத்துச்செல்கிறதா? இல்லை, நம்மை பாதிக்கும் அந்த விஷயம், மனதளவிலேயே அந்த மனிதருக்கு போய் சேர்ந்து அவர்களும் இதற்குத்தான் என்று அறியாமல் நம்மை வேறு ஏதோ ஒரு காரணத்திற்க்காக அழைக்கிறார்கள். பேசிக்கொண்டே இருக்கும் பொழுது அவர் சொல்வது ஏதோ நம் மனதில் இருக்கும் கேள்விக்கு தானாகவே பதிலையும் சொல்லி விடுகிறார்கள். 

இந்த அதிசயத்திற்கு என்ன பெயர் சூட்டுவது!

Lasting Impressions: The Power Hurt

Lasting Impressions: The Power Hurt: "Though it is the turn of my Tamil blog, the comment on my previous post on sealing the breach made me think. 'Friendship means never having ..."

Sunday, August 7, 2011

Lasting Impressions: Sealing the Breach

Lasting Impressions: Sealing the Breach: "I loved Rock On for the most part. Farhan Akhtar was cool, and Arjun Rampal a darling. But somehow, the way their friendship breaks and the ..."

Thursday, August 4, 2011

Ithu oru kaaranam!

நேற்று செய்தித்தாளில் ஒரு செய்தி - ஒரு பெண் தன் பெற்றோர்களுக்கு எதிராக புகார் செய்திருக்கிறாள். அவளுக்கு 17 வயதுதான். அவளுக்கு திருமணம் செய்ய விரும்பியதால், அவள் காவல் நிலையத்தில் புகார் செய்து அவர்கள் கைது.

ஆஹா, என்ன தைரியம், என்ன பொறுப்பு என்று நினைத்தேன். மைனர் பெண்களுக்கு திருமணம் என்பது தவறு. அப்படி செய்யும் பெற்றோர்களுக்கு தண்டனை கொடுப்பது சரியே.

ஆனால் மேலும் படிக்கும் பொழுது சீ தூ என்று ஆகி விட்டது. அவள் யாரையோ விரும்பினாளாம். அந்த பையன் அவள் பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லையாம், அதனால் அவளுக்கு அவசராமாக கல்யாணமாம்.

உலகத்தை பார்க்க பார்க்க வெறுப்புத்தான் அதிகரிக்கிறது!

Tuesday, August 2, 2011

Oru Ekkam - The Longing (sirukathai)

சூரியன் அஸ்தமிக்கும் நேரும். அந்தி வேளையில், ஜன்னல் அருகே நின்ற நான், ஏதோ ஒன்றை தேடினேன்.

ஒரு இனிய ராகம், மெல்லிசையாக என் மனதில் ஓடியது. அலைபோல் எண்ணங்கள் குதூகலித்தன. பசுமையான மரங்களும், நெருப்பை போல அதை சூழ்ந்த மலர்களும் என் இதயத்தில் குளுமையாக நிரம்ப.

ஆனால், ஒரு சஞ்சலிப்பு. எங்கே அவன் என்று தேடினேன். என் வாழ்க்கைக்கு அர்த்தம்ளிக்க வெள்ளை குதிரை மேல் வரும் கதாநாயகன், இனியும் அவனை எதிர்பார்ப்பது சரியா? ஒரு குடும்பம் என்று ஆன பிறகு, இன்னொருவனை தேடுவது?

பின்னாலிருந்து என்னை யாரோ பார்ப்பது போல் தோன்றியது. யார் என்று திரும்பிப்பார்த்தேன். கண்ணும் கண்ணும் கலந்தன. ஒரு புன் முறுவலுடன் அவன் "இதைப்பார்" என்று தன கழுத்தில் மாட்டியிருந்த காமெராவை என்னிடம் நீட்டினான். குழந்தைகள் ஓடி அருகில் வந்து, அம்மா! என்று அழைத்தன.

வெளியே தேடுவது என்னிடம் ஏற்கனவே இருக்கிறதே! என்று புரிந்து கொண்டேன். எனக்குள் வாசித்த மெல்லிசை இங்கிருந்துதானே உருவாகிறது என்று அறிந்து கொண்டேன். என் முன் இல்லாமல் என்னை கனிவாய் தாங்கி கொள்ளும் இதுவே என் உலகம்.

"போகலாமா?" என்று கேட்ட உடனே தலையை ஆட்டி, சிறுவர்கள் கையை பற்றி அவர் பின்னே செல்லும் பொழுது, என் கதாநாயகன் என்னுடனேயே இருப்பது போல் ஒரு சந்தோசம். அதை அரிந்து கொண்ட மகிழ்ச்சி.


Lasting Impressions: The Wait

Lasting Impressions: The Wait: "The wait, the long wait. At the window of life. For a whiff of fresh air For an exciting sight For fragrance sweet For golden light Fo..."

Monday, August 1, 2011

Lasting Impressions: The Turnaround

Lasting Impressions: The Turnaround: "I greeted it with warmth Making sure it was all there After all it had grown With so much love and care Fed on delicious sweets And lus..."

Saturday, July 30, 2011

Tharaasaippola vaazhkkai - The Beam Balance

தராசைப்போல் வாழ்க்கையும்
போகும் மேலேயும் கீழேயும்

இதைவிட தாழ முடியாது
என்று வருந்தும் பொழுது

திடீர் என்று ஒரு மாற்றம்
வானை நோக்கி ஒரு ஏற்றம்

ஆஹா பறக்கிறோம் என்ற பொழுது
கீழே தள்ளப்பட்ட ஏமாற்றம்

இதை தாங்க நெஞ்சில்
தைரியம் எம்மாதரம்?

எதையும் ஏற்றுக்கொள்
என்ற தாரக மந்திரம்

ஒன்றே வாழ்க்கையில்
கொடுக்கும் நிரந்தரம்

Thursday, July 28, 2011

Lasting Impressions: Wholesome Venture

Lasting Impressions: Wholesome Venture: "I met her for the book 'Pathbreakers'. She had wanted to make it big in the IT world, but circumstances made her take a break, and then husb..."

Naduvaantharam - Middle Man

உலகத்தில் எவ்வளவோ பேர் எவ்வளவோ உருப்படியான வேலைகளை செய்து வருகிறார்கள்.

சிலர், மற்றவர்கள் காட்டும் வழியை பின் பற்றுகிறார்கள்.

சிலருக்கு எந்த கவலையுமே இல்லாமல் எப்பவும் போல இருக்கிறார்கள்.

நான் இந்த எந்த வர்கத்திலேயுமே சேராத ஒரு நுடுவான்தரம்.

பூமியை காக்க வேண்டும். நடக்கும் தீமைகள் ஒழிய வேண்டும். நல்ல பண்புகள், வழிகளை கடைபிடிக்க வேண்டும் என்று துடிக்கேறேன்.

ஆனால், இறங்கி வேலை செய்ய தயங்குகிறேன்.

அதை மறைக்க இப்படி ப்ளாக், செய்தித்தாளில் செய்திகள் என்று எழுதி என் குற்ற உணர்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து நானே சந்தோசப்பட்டுக்கொள்கிறேன்.

ஆனால் இன்று என்னையும் ஏமாற்றிக்கொள்ள முடியவில்லை. :( அவரவர் வேலையில் காட்டுகிறார்கள், நீ என்ன பெரிய வழிகாட்டியா என்று என் மனம் என்னை கேட்கிறது. இதற்க்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறேன்.

Tuesday, July 26, 2011

Lasting Impressions: Keeping a Watch Every Moment

Lasting Impressions: Keeping a Watch Every Moment: "Today Hindu Metro Plus has an article on Child Sexual Abuse. As the writer rightly points out - Nov 19 is not World Day for Prevention of CS..."

Saturday, July 23, 2011

Santhi Nilava Vendum - May Peace Reign

கீழே போய் விளையாடு என்று சொல்வதற்குக்கூட தாய்மார்கள் பயப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. சில பிரச்னைகள் மேற்க்கத்திய நாடுகளில்தான் நடக்கும் என்று ஏளனமாக சிரிப்பது கூட உண்டு. நம் கலாசாரம், குடும்பத்தில் ஈடுபாடு, குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்லப் பண்பு- இவைத்தானே எல்லா தாய்களின் குறிக்கோளும் என்று நான் நம்புவதும் கூட!

ஆனால், செய்தித்தாள்களில் வரும் செய்திகளைக்கண்டால் யார் இந்த அரக்கர்கள் - சிறு கொழந்தைகளுடன் தவறான உறவு வைத்துக்கொள்ள எப்படி மனம் இடம் கொடுக்கிறது? எப்படி அவர்களை ஒரு பொம்மைப்போல கொன்று தூர எரிந்து விட்டு செல்ல முடிகிறது? முதியோர்களை கட்டிப்போட்டு, அவர்களை கொன்று, அவர்களிடமிருப்பதை பறிக்க மனம் வருகிறது?

என்ன, உலகம் புரியாத மக்காக இருக்கிறேன், வெகுளி என்று நினைக்கிறீர்களா? எனக்குள் துடிப்பது ஒரே சிந்தனையே. மறுபடியும் பழைய பழக்க வழக்கங்கள், நிம்மதி தரும் அமைதியை நான் மட்டும் தேடிச்செல்லாமல் மற்றவர்களையும் அழைத்துச்செல்ல வேண்டும் என்று. என்ன, முன் காலத்தில் மட்டும் இதெல்லாம் இல்லையா என்று தெரியாதா? இருக்கலாம். இல்லாமல் இருந்தால் காவல், ராணுவம் என்றெல்லாம் இருந்திருக்காது. ஆனால், இன்று பிரச்னைகள் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. மனதில் நிம்மதி குறைவதனால் இப்படிப்பட்ட விபரீதமான சிந்தனைகளும் அதிகரிக்கின்றன.

சாந்தி நிலவ வேண்டும் - கவி பாடியது பொய்யாகக்கூடாது... அதற்க்கு என்ன வழியோ அதை செய்ய நாம் எல்லோருமே கடமைப்பட்டிருக்கோம்.


Thursday, July 21, 2011

Lasting Impressions: The Beast Emerges

Lasting Impressions: The Beast Emerges: "Godzilla, he is not Neither ugly nor fearsome Not emerging from deep seas Nor from the belly of the earth He walks this world Looks li..."

Tuesday, July 19, 2011

தன்னம்பிக்கையே சுய தொழில் செய்வதற்கும் அதில் வெற்றி பெறுவதற்கும் வழி காட்டுகின்றன. ஐம்பது சுய தொழில்களை ஆரம்பித்த முதலாளிகளை சந்தித்தப்பொழுது பல விஷயங்கள் ஹா என்று வியப்பை உண்டாக்கின. தோல்விகளும், நெருக்கடிகளும், எதிர்ப்புகளும் வாழ்க்கையில் மிக சகஜம். அதையும் மீறி வருபவர்கள்தான் இந்த பயணத்தை தான் நினைத்தப்படி நிர்வாகித்துக்கொள்கின்றனர்

Sunday, July 17, 2011

Lasting Impressions: An Eye-Opener

Lasting Impressions: An Eye-Opener: "It was the shortest possible deadline I faced, and the question - 'am I mad to take it up?' - rang in my head. But unless you try, how do yo..."

Iru Mugangal

ஒன்று வெளியுலகம் பார்க்கும்
சிரிக்கும், பொலிக்கும்,
யாவையும் கண்டும் காணாமல்
ஒன்றும் அகாததுப்போல் நடிக்கும்
 
இன்னொன்று உள்ளிருட்டில்
தத்தளித்து, தவிப்பில்
இங்கும் அங்கும் ஓடி
எல்லாவற்றிற்கும் தேடும் பதில்
 
இதற்க்கு நடுவில் இருக்கும்
பாதையில் நடக்கும்
ஒரு சிலருக்கே கிடைக்கும்
சுகமான ஒரு முகம்

Thursday, July 14, 2011

Lasting Impressions: Sizzling and Hissing

Lasting Impressions: Sizzling and Hissing: "Yet another shaft Finds its mark In the heart's centre All hopes shatter As the arrow Pierces the armour Only a tiny pain No blood? ..."

Wednesday, July 13, 2011

Arakkargalin Rajyam

ஒரு இலட்சியத்திற்காகத்தான் நாங்கள் பாடு படுகிறோம் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் லட்சியம் இருந்தால் நல்ல வழியை தானே காட்டும். காட்டுமிராண்டித்தனமாக நடந்துக்கொண்டால்?
 
மனிதர்களுக்குள் எப்படி இந்த அரக்கத்தனம் எழுகிறது? ஏன் சம்மந்தப்படாத  உயிர்கள் மீது பரிதாபமோ கருணையோ இல்லை? தான் நினைத்ததை எப்படியாவது அடைய வேண்டும் என்ற வெறி இப்படியா புத்தியை மட்டாக்கும்? இல்லை தான் கண்டறியாத சொர்கத்தை அடைய இப்படி ஒரு ஆர்வமா? ஜெஹாத் என்ற பெயரில் மக்களை அழிப்பது! இதை செய்தால் சொர்கத்திற்கு செல்வீர்கள் என்று இன்னொரு மனிதன்  தானே சொல்கிறான்? சொல்பவன் அந்த சொர்கத்தை கண்டு விட்டு வந்தான? தான் பின்னாடி இருந்து மற்றவர்களை முன்னே துப்பாக்கி குண்டுகள் போல் வீசி காணாமல் ஒளியும் கோழை பேச்சை கேட்ட இப்படி ஒரு ஆதங்கம் கிளம்புகிறது? அவனே ஒரு நல்ல வழி காண்பித்தால்?
 
அந்த கடவுள் தான் வழி காட்ட வேண்டும். ஆனால் இன்னொரு முறை மும்பையில் நடந்த வெடி குண்டு விபத்து நடக்காமல் தடுக்க யார் பொறுப்பு எடுக்க போறார்கள்? தீவிரவாதிகள், மக்களாட்சிக்கு இடையில் நடக்கும் போராட்டத்தில் சாதாரண மனிதன் அடிப்படுவதை யார் தடுக்க போறார்கள்? பேசாமல் நாமும் கையில் துப்பாக்கியை எடுத்துகொண்டு 'சுடு முதலில், கேள்வி கேள் பிறகு' என்று இருந்து விடவேண்டியது தான்.